உக்ரைனில் உள்ள மளிகைக் கடை.. ராக்கெட்கள் மூலம் தாக்கிய ரஷ்ய படைகள் - 49 பேர் கொல்லப்பட்ட பரிதாபம்!
Russia : கார்கிவின் (Kharkiv - உக்ரைன் நாட்டில் உள்ள ஒரு நகரம்) கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடை மற்றும் ஓட்டல் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டதாக உக்ரைன் நாட்டு அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் எல்லையில் போரினால் பாதிக்கப்பட்ட பிராந்தியத்தின் குபியன்ஸ்க் மாவட்டத்தில் மக்கள் போராட்டத்தில் இறங்கியதாக கூறினார், அங்கு மாஸ்கோவின் படைகள் கடந்த ஆண்டு உக்ரேனிய துருப்புக்களிடம் இழந்த பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள ஒரு "சாதாரண மளிகைக் கடையை ராக்கெட் மூலம் தாக்கிய கொடூரமான ரஷ்யாவின் இந்த குற்றம் முற்றிலும் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்" என்று சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் ஜெலென்ஸ்கி கூறினார். இந்த கொடூர தாக்குதலில் குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.
ஜப்பானிய கடல் உணவுகளை இறக்குமதி செய்ய தடை இல்லை! மலேசியா அறிவிப்பு!
இந்த கொடூர தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவரின் உடலின் அருகில் ஒரு பெண் மண்டியிட்டுக் நின்று கதறுவது போன்ற ஒரு படத்தை Zelensky வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த இடம் ,முழுக்க சடலங்கள் சிதறி கிடப்பதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் உக்ரைன் அரசு கூறியுள்ளது. கார்கிவ் பிராந்தியத்தின் தலைவர் ஒலெக் சினெகுபோவ் கூறுகையில், க்ரோசா கிராமத்தில் மதியம் 1:15 மணியளவில் ஒரு ஓட்டல் மற்றும் கடையில் அந்த ராக்கெட் தாக்கியது என்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த கிராமம் ஒரு முன்னணி நகரமான குபியன்ஸ்கிற்கு மேற்கே 30 கிலோமீட்டர் (சுமார் 20 மைல்) தொலைவில் உள்ளது, மேலும் போருக்கு முந்தைய மக்கள் தொகை சுமார் 500 பேர் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றனர், இறந்தவர்களில் 6 வயது சிறுவனும் அடங்குவதாக அவர் கூறினார்.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த ஜான் ஃபோர்ஸ்க்கு அறிவிப்பு