அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு தாவிய கொரோனா..!! வாய்விட்டு கதறும் அதிபர் விளாடிமிர் புடின்..!!
அமெரிக்காவில் நியூயார்க் நகரம் எப்படி கொரோனா மையமாக திகழ்ந்ததோ அதே போல தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவும் கொரோனா மையமாக மாறியுள்ளது .
கொரோனா வைரசால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரஷ்யாவில் ஊரடங்கு மே 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா என அனைத்து கண்டங்களிலும் பரவியுள்ளது. இதுவரை உலக அளவில் 30 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் . அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இந்த வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போதைய வைரஸின் தாக்கம் ரஷ்யாவிடம் தீவிரமாகி உள்ளது .
இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 399 ஆக அதிகரித்துள்ளது , இதுவரையில் 972 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர் . ஒரே நாளில் 5 ஆயிரத்து 741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . அந்நாட்டில் மக்கள் கொத்துக்கொத்தாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர் . இதனால் ரஷ்யா , நாடு முழுவதும் அவசர பிரகடனம் அறிவித்துள்ளது . ஆனாலும் அதனால் பெரிய அளவில் பலனில்லை , நிலைமை கட்டிக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதால் மாகாண பிரதிநிதிகளுடன் அதிபர் விளாடிமிர் புதின் ஆலோசனையில் ஈடுபட்டார் . அதன்பின்பு அறிவிப்பு வெளியிட்ட அவர், ரஷ்யாவின் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மக்கள் சீரான சமூக இடைவெளி மற்றும் முறையான ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர், ஆனாலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது . இது மேலும் அதிகரித்தால் நிலைமை சிக்கலடைய வாய்ப்புள்ளது . இன்னும் கூட ரஷ்யாவில் கொரொனா உச்ச நிலையை அடையவில்லை , அடுத்த சில வாரங்களில் அது தீவிரம் காட்டத் தொடங்கும் , எனவே மே 11-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க ஆளுநர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது . அமெரிக்காவில் நியூயார்க் நகரம் எப்படி கொரோனா மையமாக திகழ்ந்ததோ அதே போல தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவும் கொரோனா மையமாக மாறியுள்ளது . இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக கடைபிடிக்க தவறினால் வைரஸ் பரவுவதை தடுக்க முடியாது .
ஊடரங்கை மீறுவோர் மீது ஏற்கனவே அறிவித்தபடி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் , இந்நிலையில் மே 12 க்கு பின்னர் நிலைமை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் . மே 12 க்கும்பின்னர் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அந்தந்த மாநில ஆளுநர்கள் முடிவு செய்யலாமென அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்யாவின் அணு ஆயுத நகரங்களான முக்கிய நகரங்களிலும் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் அங்கு அணு ஆயுத பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.