Asianet News TamilAsianet News Tamil

Russia-Ukraine Crisis: அனைத்து திசைகளில் இருந்தும் உக்ரைனை தாக்குங்கள்... ரஷ்ய படைகளுக்கு அதிரடி உத்தரவு!!

உக்ரைன் மீது அனைத்து திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்த ரஷ்ய படைகளுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

Russian military has ordered Russian forces to attack Ukraine from all directions
Author
Russia, First Published Feb 26, 2022, 10:24 PM IST

உக்ரைன் மீது அனைத்து திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்த ரஷ்ய படைகளுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது. அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா படைகள் 3வது நாளாக இன்று தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ரஷ்ய படைகள், உக்ரைனை சூறையாடி வருகிறது. சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் ஆயுதங்களால் உக்ரைன் நாட்டின் ராணுவ தளவாடங்கள் மற்றும் விமான தளங்கள் அழிக்கப்பட்டன. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தத் தாக்குதலில் இதுவரையில் நூற்றுக்கணக்கான உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யா தரப்பில் 3500 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், தலைநகர் கிவ்-வை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறியுள்ளன. டாங்கிகள், போர் விமானங்களின் மூலம் கிவ்வில் உள்ள முக்கிய ராணுவப் பகுதிகளை தாக்கி வருகின்றன.

Russian military has ordered Russian forces to attack Ukraine from all directions

ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இதனிடையே, மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக, உக்ரைன் ராணுவம் களத்தில் நின்று போரிட்டு வருவதாக, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஷ்கி அடிக்கடி வீடியோ வெளியிட்டு நம்பிக்கை கொடுத்து வருகிறார். அதே வேளையில், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை திரட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஷ்கி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எங்களுக்கான ஆதரவை வழங்குமாறும், ரஷ்யாவின் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் நிலத்தில் உள்ளதால், அவர்களை தடுத்து நிறுத்த ஒன்றிணைய வருமாறு கோரிக்கை விடுத்தார்.

Russian military has ordered Russian forces to attack Ukraine from all directions

அப்போது, இருநாடுகளிடையேயான போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். இந்த நிலையில் உக்ரைன் மீது அனைத்து திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்த ரஷிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. பேச்சுவார்தைக்கு உக்ரைன் அரசு மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில் ரஷிய அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்துமாறு ரஷிய ராணுவத்திற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உக்ரைன் மீது அனைத்து திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்த ரஷிய ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios