ட்ரில்லர் வைத்து தலையில் சர்ஜரி.. தனக்கு தானே ஆபரேஷன் செய்துகொண்ட நபர் - இறுதியில் நடந்து என்ன?
ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் தனது கனவுகளை கட்டுப்படுத்துவதற்காக மைக்ரோசிப் ஒன்றை மூளையில் வைத்து அறுவை சிகிச்சை செய்ய முயற்சித்துள்ளளார்.
ரஷ்ய நகரமான நோவோசிபிர்ஸ்க் நகரைச் சேர்ந்த மிகைல் ராடுகா என்பவர் தனது கனவுகளைக் கட்டுப்படுத்த எண்ணி, தனக்கு தானே ஆபத்தான முறையில் சுய அறுவை சிகிச்சைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலால் அவர் தனது உயிரையே இழக்கும் கட்டத்திற்கு சென்று திரும்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நியூஸ் வீக் வெளியிட்ட அறிக்கையின்படி, ராடுகா தனக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து, தனது கனவுகளை கட்டுப்படுத்த மைக்ரோசிப் ஒன்றை பொறுத்த முயற்சித்துள்ளளார். இந்த சம்பவம் கடந்த மே மாதம் 17ம் தேதி அன்று நடந்துள்ளது. ராடுகா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ஆபத்தான பரிசோதனையின் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இன்டர்நெட் ஸ்பீட்.. உலக அளவில் முதலிடம் பிடித்த UAE - அங்க டவுன்லோட் ஸ்பீட் என்னென்னு தெரியுமா?
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை YouTube வீடியோக்கள் மூலம் பார்த்து. அதன் மூலம் இந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்ள அவர் முடிவு செய்துள்ளார். அறுவை சிகிச்சையின் போது இரத்த இழப்பு காரணமாக கிட்டத்தட்ட இறக்கும் அளவிற்கு சென்றபோதும் கூட எப்படியாவது இந்த ஆராய்ச்சியில் வென்றுவிட வேண்டும் என்று அவர் எண்ணியது பலரை திடுக்கிட வைத்துள்ளது.
தனது சுய அறுவை சிகிச்சை தோல்வியுற்ற நிலையில், உடனடியாக அவர் சிகிச்சைகாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்த கிராஃபிக் படங்கள், அவரது முகத்தில் பல கட்டுகள் உள்ளதையும், அவரது தலைக்குள் பொருத்தப்பட்ட Electrodeயும் காண்பிக்கும் வண்ணம் இருந்தது. அந்த 40 வயது மனிதர், தனது குடியிருப்பில் சுமார் நான்கு மணிநேரம் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். இதில் அவர் கிட்டத்தட்ட ஒரு லிட்டர் இரத்தத்தை இழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.