பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்தியாவும் இலங்கையும் கால்நடை வளர்ப்பு, பண பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க புதுடெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இவர்களது சந்திப்பின்போது, இருநாடுகளின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் வர்த்தக் ஒப்பந்தமும் கையெழுத்தாகின. பிரதமர் அழைப்பின் பேரில் இந்தியா வந்திருக்கும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமருக்கான தலைமை ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசினார். பின்னர் பிரதமரை சந்தித்தார். 

இவர்களது சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. கால்நடை வளர்ப்பு, UPI மூலம் பண பரிமாற்றம், என்சிபிஐ உடன் நெட்வொர்க் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியால் இலங்கை பாதிக்கப்பட்டு இருந்தபோது, உணவு மற்றும் எரிபொருளை என சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இலங்கைக்கு இந்தியா உதவி செய்து இருந்தது. 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்பதற்கு, சர்வதேச நாணய நிதியத்திற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளித்து இருந்தது. 

சந்திப்பின்போது பேசிய பிரதமர் மோடி, ''இலங்கையில் பொருளாதார நெருக்கடிஏற்பட்டபோது தோளோடு தோள் நின்றோம். இலங்கையில் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்'' என்றார். 

Scroll to load tweet…

இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவுகளின் 75வது ஆண்டை இந்த ஆண்டு கொண்டாடும் வேளையில், இந்தியா-இலங்கை இடையே நீடித்து வரும் உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கும், மேலும் உத்வேகத்தை காட்டவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இருநாட்டு தலைவர்களின் சந்திப்பிற்குப் பின்னர் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், ''தமிழ் சமூகத்தின் விருப்பங்களை நிறைவேற்ற இலங்கை தொடர்ந்து உழைக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த ஆண்டு இந்தியா-இலங்கை இருதரப்பு உறவுகளின் 75வது ஆண்டு மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் சமூகம் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைகிறது.

Scroll to load tweet…

அதிபருடனான கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கை வாழ் தமிழர்களுக்கு என்று பல்வேறு திட்டங்களை ரூ. 75 கோடியில் அறிவித்தேன். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களின் அபிவிருத்திப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து பங்களிக்கும். வணிக மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்பை அதிகரிக்க, நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவை தொடங்கப்படும்'' என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…
Scroll to load tweet…