ரஷ்யாவின் சோச்சி பகுதியிலிருந்து, 91 பயணிகளுடன் புறப்பட்ட Tu-154 ரக விமானம் மாயமானது.
ரஷ்யாவின் சோச்சி நகரில் இருந்து இன்று அந்நாட்டு நேரப்படி அதிகாலை ஐந்து 20 மணிக்கு TU 154 ரக ராணுவ விமானம் சிரியாவின் லடாக்யா நகர் நோக்கி புறப்பட்டது.
புறப்பட்ட 20 நிமிடங்களில் அந்த விமானத்துடனாக தகவல் தொடர்பை ரஷ்ய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் இழந்துள்ளது. மேலும் அருகாமை விமான நிலையங்களில் உள்ள ரேடார்கள் மூலமும் ராணுவ விமானத்தை கண்டறிய முடியவில்லை.
விமானம் மாயமான தகவலை ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் விமானம் சிரியாவுக்கு எதற்காக சென்றது, விமானத்தில் இருந்தவர்கள் யார் என்கிற தகவலை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். கருங்கடலின் மேலே பறந்து கொண்டிருந்த போது விமானம் மாயமாகியுள்ளது. அந்த விமானத்தில் ரஷ்ய ராணுவத்தை சேர்ந்த இசைக்கலைஞர்களும், செய்தியாளர்கள் என 91 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் ரஷ்யாவின் விமானப்படை மற்றும் கடற்படை முழுவீச்சில் இறங்கியுள்ளது.
