கொடுத்த வாக்கைக் காப்பாற்றாத ரஷ்ய அதிபர்..!! பணியை தூக்கி எறிந்த செவிலியர்கள்... பேருக்குதான் வல்லரசு போல..!!
செவிலியர்கள், ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் , ஓட்டுநர்கள் சுமார் 25,000 ஆயிரம் முதல் 50,000 ரூபிள் வரை பெறுவார்கள் என்றும் அவர் கூறினார், ஆனால் அது எதுவுமே தங்களுக்கு இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
மோசமான பணிச்சூழல் குறைந்த ஊதியம் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை இல்லாததால் ரஷ்யாவின் மிகப்பெரிய மருத்துவமனையிலிருந்து செவிலியர்கள் கூண்டோடு பணி விலகியுள்ள சம்பவம் அந்நாட்டின் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அதிபர் விளாடிமிர் புதின் மருத்துவ ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் 12க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வேலையை கைவிட்டதாக தெரிவிக்கின்றனர் . ரஷ்யாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது , இதுவரையில் ரஷ்யாவில் 87 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதுவரை அங்கு 794 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 7 ஆயிரத்து 346 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர் . 79 ஆயிரத்து 7 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் நாட்டில் வைரஸ் தொற்று அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது . அதுமட்டுமின்றி கொரோனா தாக்குதலுக்குப் பின்னர் ரஷ்யாவின் பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
இந்நிலையில் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் , மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர் . அந்நாட்டு மருத்துவர்களுக்கு போதிய அளவில் பாதுகாப்பு கவசங்கள் கூட இல்லாத நிலை உள்ளதாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய அளவில் சிகிச்சை வழங்க மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என மருத்துவர்களும் அந்நாட்டு மக்களும் குற்றம்சாட்டுகின்றனர் . உலகிலேயே மிக வளர்ந்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளே தற்போதைய இந்த வைரசை எதிர்க்க முடியாமல் திண்டாடி வருகின்றன. இந்நிலையில் மருத்துவமனையில் போதிய பணிச் சூழலும் போதிய பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாததால் மருத்துவமனைகளில் இருந்து செவிலியர்கள் பணியை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தெரிவிக்கும் பணியை கைவிட்ட சில செவிலியர்கள், கடந்த இரண்டு மாதகாலமாக பொறுத்திருந்த தாங்கள் ஒரு கட்டத்தில் பணியை கை விட்டுள்ளோம், ரஷ்யாவில் சுகாதார கட்டமைப்பு பல ஆண்டுகளாக மிக மோசமான நிலையில் உள்ளது, வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு போதுமான பாதுகாப்பு கவசங்கள் இல்லை , பணிச்சூழல் இல்லை, அதற்கேற்ற ஊதியமும் இல்லை , ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நாடு முழுவதும் சுகாதார ஊழியர்களுக்கான மாதாந்திர போனஸ் 10 பில்லியன் ரூபிள் அதாவது (132 மில்லியன் டாலர்) வழங்கப்படுமென அதிபர் புடின் உறுதியளித்தார், அதேபோல் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மாதத்திற்கு கூடுதலாக 80,000 ரூபிள் பெறுவார்கள் என்றும் , செவிலியர்கள், ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் , ஓட்டுநர்கள் சுமார் 25,000 ஆயிரம் முதல் 50,000 ரூபிள் வரை பெறுவார்கள் என்றும் அவர் கூறினார், ஆனால் அது எதுவுமே தங்களுக்கு இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், இது தொடர்பாக குறிப்பிட்ட பிரதிநிதிகளைச் சந்தித்து, இந்த பிரச்சினையை தீர்க்க எங்கள் தரப்பில் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளது. தனிப்பட்ட மருத்துவமனைகளில் உபகரணங்கள் பற்றாக்குறை என்பதை எளிதில் “நிராகரிக்க முடியாது” ஆனால் இந்த ஒரு நிகழ்வை வைத்துக்கொண்டு ரஷ்யாவின் சுகாதார அமைப்பின் ஒட்டுமொத்த நிலையை குறை கூறுவதை ஏற்க முடியாது எனவும் அது அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.