Asianet News TamilAsianet News Tamil

நெருப்புடா, விளையாடாதே: அமெரி்க்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை: சீனாவும் கடும் ஆத்திரம்

ரஷ்யாவிடம் இருந்து சீனா ஆயுதங்களை கொள்முதல் செய்தமைக்காக சீனாவுக்கு முதல்முறையாக அமெரி்க்கா தடைவிதித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான விளைவுகள் கடும் பயங்கரமாக இருக்கும் என்று அமெரிக்காவுக்கு சீனாவும், ரஷியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Russia warn america
Author
Russia, First Published Sep 22, 2018, 5:52 PM IST

ரஷ்யாவிடம் இருந்து சீனா ஆயுதங்களை கொள்முதல் செய்தமைக்காக சீனாவுக்கு முதல்முறையாக அமெரி்க்கா தடைவிதித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான விளைவுகள் கடும் பயங்கரமாக இருக்கும் என்று அமெரிக்காவுக்கு சீனாவும், ரஷியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

உக்ரைனில் ரஷியாவின் நடவடிக்கை, அமெரிக்கத் தேர்தலில் தலையீடு ஆகியவற்றால் ரஷியா மீது அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதிருப்தி அடைந்து சில தடைகளை விதித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல், ரஷியாவைக் குறிவைத்து அந்நாட்டுடன் ராணுவ ஒப்பந்தங்கள் செய்யும் நாடுகளையும் எதிரியாக பாவித்து, அந்நாட்டுக்கு பொருளாதார தடைகளையும் விதிக்கும் சிஏ ஏடிஎஸ்ஏ என்ற சட்டத்தையும் அமெரிக்கா கொண்ட வந்தது.

இதுவரை அந்த சட்டத்தின் மூலம் ரஷியா, ஈரான், வடகொரியா, ஆகிய நாடுகளுக்கு மட்டுமே தடை விதித்து இருந்தது. இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து போர்விமானங்களை கொள்முதல் செய்தமைக்காக சீனாவுக்கு தடை விதித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஷியாவிடம் இருந்து சீன ராணுவத்தி்ன் இடிடி நிறுவனம் ரஷியாவின் சுகாய் ரக ஏவுகணைகளை வாங்கியுள்ளது. இதன் காரணமாக சீனாவின் இடிடி நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குநர் லிசாங்பு மீதும் சிஏஏடிஎஸ்ஏ சட்டத்தின் மூலம் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இந்த தடையால், அமெரிக்கா மீது சீனாவும், ரஷியாவும் கடும் கோபத்தில் உள்ளன. ரஷியாவின் வெளியுறவுத்துணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் விடுத்த அறிக்கையில், ரஷியா, அமெரிக்கா இடையே அழுத்தங்களை தூண்டிவிடும்போது கடந்த கால சம்பவங்களை நினைவில் கொள்வது நல்லது. நெருப்புடன் விளையாடுவது சிறுபிள்ளைத்தனமானது. அது மிகப்பெரிய பயங்கரத்தில் முடியும். இதுபோன்ற எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் ரஷியா தன் பாதையில் இருந்து விலகாது எனத் தெரிவித்தார்.

இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், இந்த தடை முழுக்க முழக்க ரஷியாவை குறிவைத்து எடுக்கப்பட்டது. வேறு எந்த நாட்டு்ககு எதிராகவும் இல்லை. அதேசமயம், ரஷியாவுடன் நட்பு பாராட்டினால், இதேநிலைதான் ஏற்படும் எனத் தெரிவித்தனர்.

இதுகுறித்து சீன ெவளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜெங்க் கயாங் கூறுகையில், அமெரிக்காவின் காரணமற்ற இந்த நடவடிக்கைக்கு சீனா கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறது. சர்வதேச விதிமுறைகளை அமெரிக்கா மீறுகிறது. தடையை திருத்திக்கொண்டு வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios