ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது வீட்டின் உட்புறத்தை முதல் முறையாக உலகிற்கு காட்டியுள்ளார். தங்கத்தால் ஆன அலங்காரங்கள், ஆடம்பரமான படுக்கையறைகள், மற்றும் ஒரு 'வீட்டு தேவாலயம்' ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த வீட்டில்தான் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Russia President Putin's inside Kremlin Palace: 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதல் முறையாக தனது வீட்டின் உட்புறத்தை உலகிற்கு காட்டியுள்ளார். ரஷ்ய பத்திரிகையாளர் ஜரூபின், புடினின் வீட்டின் உட்புறத்தைப் பற்றிய ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். இதில் புடின் தனது வீட்டைப் பற்றி விளக்குகிறார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், புடினின் வீட்டில் உள்ள கண்ணாடியின் சட்டம் தங்கத்தால் ஆனது நீங்களே பார்க்கலாம். தங்க ஜிகினாக்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. புடினின் வீடு ஆடம்பரத்திற்கும் அழகிற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

புடினின் வீடு, கிரெம்ளினில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை என்று அவர் கூறுகிறார். புடின் மற்றும் ஜரூபின் இடையேயான இந்த நேர்காணலின் ஒரு பகுதி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முழு நேர்காணலும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும்.

புடினின் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிறப்பம்சங்கள்
புடினின் வீட்டில் முதலில் கண்ணில்படுவது ரஷ்ய பேரரசர் அலெக்சாண்டர் III இன் அழகிய ஓவியம். இது ஒரு மேஜையில் வைக்கப்பட்டுள்ளது. ஜன்னலுக்கு அருகில் ஒரு வெள்ளை நிற பிரமாண்ட பியானோ உள்ளது. அதை வாசிக்க நேரம் கிடைக்கிறதா என்று கேட்டதற்கு, புதின் வருத்தத்துடன், அரிதாகவே நேரம் கிடைப்பதாக புடின் கூறுகிறார். அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு நூலகம், இரண்டு ஆடம்பர படுக்கையறைகள் மற்றும் ஒரு சிறிய 'வீட்டு தேவாலயம்' உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில்தான் 2023 இல் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் புடின் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Scroll to load tweet…

தாமதமாக பணியை துவங்கும் புடின் 
புடின் வீட்டில் "நிறைய நேரம்" செலவிடுவதாகக் கூறுகிறார். பெரும்பாலும் தாமதமாக பணியை துவங்குவாராம். இது புடினின் பல வீடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு அவர் கட்டிடக்கலை திட்டங்களைத் தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு, அவர் தனது பில்லியன் டாலர் மதிப்புள்ள அரண்மனையைப் புதுப்பித்தார். அதில் இருந்த தங்க அலங்காரங்களை அகற்றினார்.

Helipad in the Kremlin Palace:
மோட்டார் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளைத் தடுக்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கிரெம்ளின் மாளிகைக்குள் ஒரு ஹெலிகாப்டர் தளத்தை கட்டியுள்ளார். ஹெலிகாப்டர் தளம் மே 2013 இல் நிறைவடைந்தது. தற்போது கிரம்ளினில் இருந்து வெளியே செல்ல வேண்டுமானால் புடின் மில் மி-8 ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி வருகிறார். ரஷ்யாவுக்குள் எங்கு செல்ல வேண்டுமானாலும் இந்த ஹெலிகாப்டரைத்தான் பயன்படுத்துகிறார்.