உக்ரைனை அலறவிடும் ரஷ்யா: சைரன் சத்தம் கேட்டு ஓடி ஒளிந்த அப்பாவி மக்கள்!

ரஷ்யா மீண்டும் உக்ரைன் தலைநகர் மீது ட்ரோன் தாக்குதல் நடந்தி அப்பாவி மக்களை அச்சுறுத்தியுள்ளது.

Russia Ukraine war: Sirens wail in Kyiv as city hit by drone attack

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா தன் அண்டை நாடான உக்ரைன் மீது தொடர் தாக்குதல்களை நடத்திவருகிறது.  ஏவுகணைகளை விசித் தாக்கியதில் உக்ரைன் நாட்டு பொதுமக்கள் பலரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் இந்த சர்வாதிகாரப் போக்கினால், உலக நாடுகளின் கண்டனங்களையும் புறக்கணிப்பையும் சம்பாதித்தது ரஷ்யா. இருப்பினும் எதற்கும் அடங்காமல் வெள்ளிக்கிழமை மற்றொரு ட்ரோன் தாக்குதலை உக்ரைன் தலைநகரில் அரங்கேற்றியுள்ளது.

இதுகுறித்து உக்ரைனின் கீவ் நகர ஆளுநர் குலேபா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தலைநகரின் பல பகுதிகளில் ட்ரோன் தாக்குதல் நடந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

பெருமிதத்துடன் வாழ்ந்தவர் உங்கள் தாய்: பிரதமர் மோடிக்கு தலாய் லாமா ஆறுதல்

Russia Ukraine war: Sirens wail in Kyiv as city hit by drone attack

இதனால், நகர் முழுவதும் சைரன் மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனர் என்றும் குலேபா தெரிவித்துள்ளார்.

தலைநகரிலிருந்து 20 கி.மீ. தொலைவு வரை வான்வழித் தாக்குதல் நடைபெற்ற சத்தம் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்தத் தாக்குதலில் கீவ் நகரில் உள்ள வாகனங்கள், வீடுகள், அரசுக் கட்டடங்கள் தகர்க்கப்பட்டதாக கிவ் நகர மேயர் விதாலி கூறியுள்ளார். ஈரானில் தயாரிக்கப்பட்ட 16 ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா நடத்தும் தாக்குதலுக்கு ஈரான் ஆயுத சப்ளை செய்கிறது என உக்ரைன் குறை கூறுகிறது. ஆனால், ஈரான் அரசு அதனை மறுத்து, தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்புதான் ஆயுதங்களை விநியோகித்தோம் என்றும் சொல்கிறது.

ஊழல் வழக்கில் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios