ஊழல் வழக்கில் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடிய ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை 33 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டில் பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி. 77 வயதாகும் இவர் அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றவர்.
இவரது தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 2020ஆம் ஆண்டு மியான்மரில் நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஆங் சாங் சூகியின் ஆட்சியிலிருந்து அகற்றி மீண்டும் ராணுவ ஆட்சி வந்தது.
பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூகிக்கு ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டிவிட்டது உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான விசாரணை நடத்திய மியான்மர் நீதிமன்றம் ஏற்கெனவே 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது.
அவருக்கு மீதான மேலும் 5 ஊழல் வழக்குகளில் இன்று மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவர் மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கருதி மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 33 ஆண்டுகள் அவர் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
உறைபனியில் கனவுலகம் போல் காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி!