அதிர்ச்சி..! பெண்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்து.. என்னால சொல்ல முடியல இதுக்கு மேல..கதறிய உக்ரைன் எம்.பி..
ரஷ்யா- உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர், ரஷ்ய வீரர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து, அவரது உடல்களில் முத்திரையிட்டு கொல்லுவதாகவும் வேதனையுடன் தனது புகைப்படத்துடன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது. ஒரு மாதத்துக்கு மேல் ரஷிய படைகளின் தாக்குதல் நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. கீவ், கார்கீவ், கெர்சன், சுமி, லிவிவ், மரியுமோல் உள்ளிட்ட நகரிங்களில் குண்டு மழைகளை பொழிந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது ரஷ்ய படை. ஏவுகணை வீச்சு மற்றும் வான்வழி தாக்குதல்கள் மூலம் கட்டிடங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன.
ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் பெரிய பெரிய கட்டிடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், குடியிருப்புகள் உருகுலைந்துள்ளனர். போர் காரணமாக, உக்ரைனிலிருந்து இதுவரை 41 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் - ரஷ்யா தரப்புகளுக்கிடையே நடைபெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துள்ளன.
மேலும் இந்த போரில் இரு தரிப்பில் பெரும் உயிர் சேதங்கள ஏற்பட்டுள்ளன. இதனிடையே ரஷ்ய இராணுவம் அப்பாவி பொது மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் தலைநகர் கீவ் அருகே வடமேற்கே 37 கி.மீ தொலைவில் உள்ள புச்சா நகரில் கடும் தாக்குதலில் ரஷ்ய படையினர் ஈடுப்பட்டுனர். மேலும் பொதுமக்களைத் துன்புறுத்தி படுகொலை செய்வதாக உக்ரைன் தொடர்ந்து குற்றச்சாட்டி வந்தது.
இந்நிலையில் அந்நகரிலிருந்து ரஷ்ய படை வெளியேறியுள்ள நிலையில் புச்சா நகரில் மக்கள் துன்புறுத்தி இறந்ததற்கான ஆதராங்களை உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனா். இதுவரை 410 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சடலங்களின் உடல்களில் அதிக காயங்கள் எதுவும் இல்லாததால், உயிரிழந்தவா்கள் அனைவரும் மிக அருகிலிருந்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைன் பெண் எம்.பி. லெசியா வாசிலென்க், தனது ட்விட்டர் பதிவில் ரஷிய வீரர்கள் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பெண்களின் உடலில் முத்திரை குத்துவதாகவும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''ரஷ்ய வீரர்கள் கொள்ளையடித்தனர். பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தனர், கொலை கூடச் செய்தனர். 10 வயது சிறுமிக்குக் கூட மலக்குடல் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. சில சிறுமிகளுக்கு ஸ்வஸ்திகா முத்திரை போன்ற வடிவில் தீக்காயங்களும் உள்ளன. ரஷ்யாவின் ஆண்கள் தான் இதை செய்துள்ளனர். ரஷ்யாவின் தாய்மார்கள் அவர்களை வளர்த்துனர். ரஷ்யா ஒரு ஒழுக்ககேடான குற்றவாளிகளின் தேசம் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் மற்றோரு பதிவில், , "நான் பேச முடியால் இருக்கிறேன். எனக்கு வார்த்தைகள் எழவில்லை. ஏனெனில் என் மனம் கோபத்தாலும் பயத்தாலும் வெறுப்பாலும் செயலிழந்துவிட்டது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.