Russia - Ukraine war : ஒருபக்கம் ஏவுகணை தாக்குதல்..மறுபுறம் பேச்சுவார்த்தை..ரஷ்யாவின் இலக்கு தான் என்ன..?

Russia Ukraine Crisis : உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்றிரவு பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. பெலாரஸ் நாட்டில் கோமல் நகரில் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மீண்டும்  பேச்சுவார்த்தை அறிவிக்கப்பட்டுள்ளது.

Russia Ukraine Crisis updates

உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் போன்ற இடங்களில் ரஷ்ய ராணுவம் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. காவல்துறை அலுவலகம், தொலைக்காட்சி கோபுரம் போன்ற முக்கிய இடங்களின்மீதும் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தெற்கு உக்ரைனிலுள்ள கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்திருக்கிறது.

Russia Ukraine Crisis updates

கார்கிவ் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவின் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 112 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பாதுகாப்புத்துறை, உளவுத்துறை கட்டடங்கள் அருகேயுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற ரஷ்யா நேற்றே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.உக்ரைனுடனான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்க உள்ளபோதும் கூட ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது

Russia Ukraine Crisis updates

கடந்த 7 நாட்களாக நடந்து வரும் போரில் சுமார் 6,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் மீது தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரட்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.முன்னதாக, உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 64 கிலோமீட்டர் தூரத்துக்கு ரஷ்ய ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்பது செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில் தெரியவந்துள்ளது. இதனால், கீவ் பகுதியில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது.

Russia Ukraine Crisis updates

இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி போர்நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு அமைச்சர் ஒலக்ஸி ரெஸ்னிகோவ், வெளியுறவு இணை அமைச்சர் அலக்ஸாண்டர் லுகாஷென்கோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.ரஷ்ய தரப்பில் ரஷ்ய நாடாளுமன்றத்தின் சர்வதேச விவகாரக் குழுவின் தலைவர் லியோனட் ஸ்டல்ஸ்கி தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதில் பேசிய உக்ரைன் தரப்பினர், உடனடியான போர்நிறுத்தம் தான் பேச்சுவார்த்தைக்கான தங்கள் இலக்கு என்று கூறியுது. இதுவரை நடந்துள்ள போரில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதால் போர் நிறுத்தமே தேவை என்றும் ரஷ்யப்படைகள் வெளியேற வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தியது. ரஷ்யா தரப்பில், . நேட்டோவில் உக்ரைன் இணையக்கூடாது, ஐரோப்பிய யூனியனை காரணம் காட்டி ரஷ்ய எல்லையில் ஐரோப்பிய நெருங்கி வருவதை ஏற்க முடியாது எனவும், இதற்கு உக்ரைன் காரணமாக இருக்கக்கூடாது எனவும் உறுதியாக தெரிவித்தது. 

Russia Ukraine Crisis updates

இந்நிலையில்உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்றிரவு பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. பெலாரஸ் நாட்டில் கோமல் நகரில் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மீண்டும்  பேச்சுவார்த்தை அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios