Asianet News TamilAsianet News Tamil

Russia Ukraine crisis: ரஷ்யர்களுக்கு இங்கு என்ன வேலை..? அவர்கள் கொல்லபடுவார்கள்..உக்ரைன் அதிபர் காட்டம்..

உக்ரைன் போர் உக்கிரமடைந்திருக்கும் நிலையில், ரஷ்யர்கள் இங்கே கொல்வார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் எனவும் எங்கள் மண்ணில் நாங்கள் வலிமையுடன் இருக்கிறோம் எனவும் 
உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
 

Russia Ukraine Crisis updates
Author
Ukraine, First Published Mar 2, 2022, 2:54 PM IST

சிஎன்என், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி- யை பேட்டி எடுத்டுள்ளனர். அதில் பேசிய அவர் "உக்ரைன் மீது தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரட வேண்டும். நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்துமே ரஷ்ய விமானப்படை தங்கள் வான்பரப்பைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். இதன்மூலம் நாங்கள் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உறுப்பு நாடுகளை இழுத்துவிடுவதாக நினைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மேலும் உக்ரைனிலிருந்து பத்திரமாக வெளியேற சொல்லி நிறைய அழைப்பு வந்தும் நான் எதையும் ஏற்கவில்லை. நான் இங்கு தான் இருப்பேன். மேலும் நேட்டோ ஒருவேளை எங்களின் உறுப்பினர் கோரிக்கையை ஏற்காவிட்டாலும், சட்டத்திற்கு உட்பட்டு அளிக்கக் கூடிய பாதுகாப்பு உத்தரவாதத்தையாவது நல்குமாறு நேட்டோவுடன் வேண்டுவோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நேட்டோ எங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், எங்களின் பிராந்திய ஒருமைப்பாட்டை நாங்கள் பேண, எங்கள் எல்லைகளைப் பாதுகாக்க, அண்டை நாடுகளுடன் நாங்கள் கொண்டிருக்கும் உறவைப் பேண, நாங்கள் முழுமையாக பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உறுதி செய்வதற்கான உதவிகளை சட்டத்துக்கு உட்பட்டு செய்ய வேண்டும்.

உக்ரைன் தோல்வியடைந்துவிட்டால் ரஷ்யப் படைகள் நேட்டோ நாடுகளின் எல்லைகளில் வந்து நிற்கும். நாளை இதே நிலைமை நேட்டோ நாடுகளுக்கும் ஏற்படலாம். இங்கே ஒவ்வொரு நாளும் போர் நடக்கிறது. அன்றாடம் உதவிகளும் தேவைப்படுகின்றன. உலக நாடுகள் உதவிகளைத் துரிதப்படுத்த வேண்டும்" என்றார். மேலும் இது எங்களின் தாய்நாடு. நாங்கள் அதைப் பாதுகாக்கும் பணியில் உள்ளோம். எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பாதுகாக்கும் பணியில்  உள்ளோம். எங்களின் குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் வாழும் உரிமைக்காக போராடுகிறோம் என்று பேசினார்.

ரஷ்யர்களுக்கு இங்கு என்ன வேலை? அவர்களுக்கு எங்கள் மக்களின் மனநிலை புரியாது. எங்கள் நாடு, எங்கள் கொள்கை என்று எதுவுமே தெரியாது. ரஷ்யர்கள் இங்கே கொல்வார்கள் அல்லது கொல்லப்படுவார்கள். இது மட்டுமே அவர்களுக்கு தெரியும். எங்கள் மண்ணில் நாங்கள் வலிமையுடன் இருக்கிறோம். இறுதி வரை வலிமையாக இருப்போம்" என்று ஜெலன்ஸ்கி கூறினார்.ஏற்கெனவே முதற்கட்டப் பேச்சுவார்த்தை முடிந்துவிட்ட நிலையில், பெலாரஸின் கோமல் நகரில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதிபர் ஜெலன்ஸ்கியின் பேட்டி கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் அதிபரின் பேட்டி சென்றுகொண்டிருந்தபோதே, ரஷ்ய ஏவுகணை ஒன்று அரசு செய்தி சேனல் கோபுரம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 5 பேர் கொல்லப்பட்டதாக அதிபர் ஜெலன்ஸ்கியிடம் அவசர செய்தி தெரிவிக்கப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios