Russia Ukraine Crisis: மாணவர்களை மீட்பது உங்களுக்கு முக்கியம்..ஆனால் எங்களுக்கு..! உக்ரைன் தூதர் வெளிப்படை..

Russia Ukraine Crisis : மாணவர்களை பத்திரமாக மீட்டு வருவதே இந்தியாவின் முன்னுரிமையாக உள்ளது, அதேசமயம் போரை நிறுத்துவதும், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதும் எங்கள் முன்னுரிமையாக உள்ளது என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறியுள்ளார்.

Russia Ukraine Crisis updates

Russia Ukraine Crisis : மாணவர்களை பத்திரமாக மீட்டு வருவதே இந்தியாவின் முன்னுரிமையாக உள்ளது, அதேசமயம் போரை நிறுத்துவதும், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதும் எங்கள் முன்னுரிமையாக உள்ளது என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறியுள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 5வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. போரால் உக்ரைன் நாட்டு மக்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய படைகளின் ஆக்ரோஷ தாக்குதல்களால், உக்ரைன் நாட்டு மக்கள் ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தப்படாவிட்டால், எண்ணிக்கை 7 மில்லியனை எட்டும் என்றும்  கடும் குளிரிலும் எல்லைகளில் மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்து கிடக்கின்றனர் என்று அவர் கூறினார். 

மேலும் உக்ரைனில் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால். இதுவரை 352 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, ரஷ்யாவின் அமைதிக்கு எதிரான நடவடிக்கையின் விளைவாக ஏற்கெனவே 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். குண்டு வீச்சு உள்ளிட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.

இந்திய அதிகாரிகளிடம் இருக்கும் அதே தகவல்தான் என்னிடம் உள்ளன. மாணவர்களை பத்திரமாக மீட்டு வருவதே இந்தியாவின் முன்னுரிமையாக உள்ளது. போரை நிறுத்துவதும், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதும் எங்கள் முன்னுரிமையாக உள்ளது.நான் இந்திய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், இரு நாடுகளும் அமைதியை விரும்புகின்றன என்று கூறினார்.

முன்னதாக எத்தனை உலகத் தலைவர்கள் சொல்வதை ரஷ்ய அதிபர் புதின் கேட்பார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்திய பிரதமர் மோடி பேசினால் அமைதி பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios