Asianet News TamilAsianet News Tamil

Ukraine Russia War: களத்தில் இறங்கிய நேட்டோ..கண்டிசன் போடும் உக்ரைன்.. கடுப்பில் ரஷ்யா..பலியாகும் மக்கள்..

Russia Ukraine Crisis : உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பு இராணுவ உதவியை அளிக்கும் என்ற அறிவித்துள்ள நிலையில் தாக்குதலின் வேகத்தைக் குறைத்திருந்த ரஷ்ய ராணுவம் தற்போது மீண்டும் வான்வழித் தாக்குதலுக்கான சைரனை ஒலிக்கச் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Russia Ukraine Crisis updates
Author
Ukraine, First Published Feb 28, 2022, 8:12 PM IST

போர் நிறுத்தம் தொடர்பாக பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா அழைப்பு விட்டிருந்த நிலையில் உக்ரைன் அதற்கு ஒப்புக்கொண்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு அமைச்சர் , வெளியுறவு இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.ரஷ்ய தரப்பில் ரஷ்ய நாடாளுமன்றத்தின் சர்வதேச விவகாரக் குழுவின் தலைவர் லியோனட் ஸ்டல்ஸ்கி தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்திய நேரப்படி 2.30 மணிக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட பேச்சுவார்த்தை 3.50 மணிக்குத் தொடங்கியது.இந்நிலையில், உக்ரைனன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு உடனடியாக உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும். சிறப்பு நடவடிக்கை மூலம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

’ரஷ்யப் படையினரே... உடனடியாக ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பின்வாங்குங்கள். நீங்கள் உங்கள் கமாண்டர்கள் சொல்வதை நம்பாதீர்கள். உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என்று ரஷ்யப் படைகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். 

"எங்களின் இலக்கு ஐரோப்பாவில் இருக்க வேண்டும். சம வாய்ப்புடன், சம அந்தஸ்துடன் இருக்க வேண்டும். அது நியாயமான இலக்கு. அடையக் கூடிய இலக்கு என்றே நினைக்கிறேன். கடந்த 4 நாட்களில் மாஸ்கோ படைகள் 16 குழந்தைகளைக் கொன்றது. 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

நாங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளோம். இது ஒழுக்க நெறி ரீதியாக தவறாக இருக்கலாம். ஆனால் இப்போதைக்கு பாதுகாப்பை கருதும்போது மிகவும் உபயோகரமானதாக இருக்கும். போர் முனையில் சண்டையிட விருப்பமுள்ள, திறனுள்ள, அனுபவமுள்ள கைதிகளை விடுவிக்க உள்ளோம். இந்தச் சூழலில் இங்கு அனைவருமே போர வீரர்கள் தான். இந்தப் போரில் எல்லோரும் வெற்றி பெறுவோம்" என்று கூறியுள்ளார்.

நேட்டோ குழு, உக்ரைனுக்கு ராணுவ உதவியை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கை மூலம் விமர்சித்துள்ளது ரஷ்யா.இந்நிலையில், நேற்றிரவு முதல் இன்று பிற்பகல் வரை தாக்குதலின் வேகத்தைக் குறைத்திருந்த ரஷ்ய ராணுவம் தற்போது மீண்டும் வான்வழித் தாக்குதலுக்கான சைரனை ஒலிக்கச் செய்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios