Asianet News TamilAsianet News Tamil

Russia - Ukraine war :உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொடுப்போம்..கரம் கோர்த்த நேட்டோ..அப்படி நடந்தால்.!புதின் மிரட்டல்

Russia - Ukraine war : உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், நிதியுதவி தரப்படும் என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ள நிலையில் நேட்டோ அமைப்பு முடிவு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
 

Russia Ukraine Crisis updates
Author
Russia, First Published Feb 28, 2022, 6:37 PM IST

நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய, ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு நேட்டோ அமைப்பில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காரணம், உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல், உக்ரைனில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பது என்று பல ரூபங்களில் ஆபத்து வந்துவிடும் என்று ரஷ்யா கருதுகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வந்தது. இந்நிலையில், உக்ரைன் மீது, ரஷ்யா வான்வெளி மற்றும் தரை வழி தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவியில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் 5 வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்றி வளைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் ரஷ்ய படையினர். குறிப்பாக தலைநகர் கீவ்-யில் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. 

உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, பிரிட்டன், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும்  அயர்லாந்து, இத்தாலில், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான்பரப்பில் ரஷ்யா விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா  கொண்டு வந்த வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை நீக்கியது ரஷ்யா.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த புதின் , ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்திருக்கின்றன. ரஷ்யா குறித்து நேட்டோ நாடுகள் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இதுபோன்ற அசாதாரண சூழல் நிலவுவதால், அணு ஆயுத தடுப்புப் படையை தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டிருக்கிறேன்" என்றார்.  உக்ரைன் மீது போர் தொடுத்தன் மூலமாக உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் ரஷ்யா, தற்போது அணு ஆயுத தடுப்புப் படையை தயார் நிலையில் இருக்குமாறு கூறியிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதனிடையே உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், நிதியுதவி தரப்படும் என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. நேட்டோ அமைப்பு இந்த முடிவிற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனுக்கு நேட்டோ ஆயுதங்கள், நிதியுதவி வழங்குவதன் மூலம் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios