Asianet News TamilAsianet News Tamil

Ukraine - Russia Crisis: திமிறி நிற்கும் ரஷ்யா.. ஆப்பு அடிக்கும் அண்டை நாடுகள்.. முடிவுக்கு வருமா போர்..

Ukraine - Russia Crisis: இத்தாலி வான்வெளியில் ரஷிய நாட்டைச் சேர்ந்த விமானங்கள் பறக்க தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பெல்ஜீயம், டென்மார்க், அயர்லாந்து ஆகிய நாடுகள் ரஷிய விமானங்கள் பறப்பதற்கு வான்வழிக்கு தடை விதித்துள்ள நிலையில் தற்போது இத்தாலி அரசும் தடை விதித்துள்ளது.
 

Russia Ukraine Crisis updates
Author
Italy, First Published Feb 27, 2022, 10:09 PM IST

உக்ரைன் -ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான போரால் மற்ற நாடுகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பெரும்பாலான நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன. ஏனினும் இதுவரை இரு நாடுகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபடமால் தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைனில் முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளன. உக்ரைனின் வடக்கு பகுதி முழுவதுமாக ரஷ்ய ராணுவத்தின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் கார்கீவ் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படையினர் வசம் சென்றுள்ளது. இதனால் அந்நகர்களில் உள்ள மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை சுமார் 4 நாட்களில் மட்டும் 1.68 லட்சம் பேர் உக்ரைனிலிருந்து வெளியேறியுள்ளனர் .மேலும் ஒவ்வொரு நிமிடமும் நிலைமை மாறிக்கொண்டே இருக்கிறது. பெரும்பாலான மக்கள் போலந்து , மால்டோவா,ஹங்கேரி, ரூமேனியா, சுலோவாக்கியா மற்றும் பெலாரஸில் தஞ்சம் அடைந்து வருவதாக ஐ.நாவின் அகதிகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் உக்ரைனின் வடக்கு பகுதியில் மேலும் முன்னேறி வருவதற்கு ரஷ்ய படை முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இதனால் அணு ஆயுத தடுப்பு பிரிவினர் தயார் நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அறிவுறுத்தியுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையெ  அணு ஆயுத தடுப்பு பிரிவினரை தயார் நிலையில் இருக்க புதின் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் விமானங்கள் தங்கள் வான்வழியில் பறக்க இத்தாலி அரசு தடைவிதித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios