Ukraine - Russia Crisis:இப்போது நடப்பது இனப்படுகொலை..! குழந்தைகளை கூட விடுவதில்லை.. உக்ரைன் அதிபர் பகீர்
Ukraine - Russia Crisis: உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா போரிட்டு வருவது இனப்படுகொலை என்று அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி குற்றச்சாட்டியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு தங்களை கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடையும் விதித்துள்ளது. இருப்பினும் ரஷ்யா தங்கள் மீது பொருளாதார தடை விதித்த மேற்கத்திய நாடுகள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரித்து , இராணுவ உதவி செய்யும் நாடுகள் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்யா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ரஷ்ய அதிபர் புதின் தனும் உரையில் அணு ஆயுத மிரட்டலும் மறைமுகமாக விடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
ரஷ்யா - உக்ரைன் இடையே நான்காவது நாளாக போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா போரிட்டு வருவது இனப்படுகொலை என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார். மக்கள் வசிக்கும் பகுதிகளில் கூட ரஷ்யா குண்டுகளை வீசி வருவதாக அவர் குற்றச்சாட்டியுள்ளார். மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக இருந்துவரும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யா மீது உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி புகார் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ஆம்புலன்ஸ்கள், குடியிருப்புகள், மழலையர் பள்ளிகள் போன்றவற்றை ரஷ்ய படைகள் தாக்குவது மிருகத்தனமாக செயல் என்று அவர் காட்டமாக கூறியுள்ளார். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று ரஷ்யா கூறி வருவது அப்பட்டமான பொய் என்றும் மின் நிலையங்கள், மருத்துவமனைகள் மீது ரஷ்ய இராணுவ படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன என்றும் அவர் பேசியுள்ளார். மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கான வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராணுவ கட்டமைப்பு இல்லாத நகரங்களில் கூட ராக்கேடுகள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு ரஷ்ய படை தாக்குதல் நடத்தி வருகிறது. வாசில்கீவ், கீவ்,செர்னி கீவ், சுமி, கார்கிவ், உக்ரைன் உள்ளிட்ட நகரங்களில் இரண்டாம் உலக போரின் போது நடந்த சம்பங்கள் மீண்டும் அரங்கேறி வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.