Russia-Ukraine crisis: திடீர் திருப்பம்..இந்தியாவை நாடும் ரஷ்யா..உங்கள் ஆதரவை எங்களுக்கு தாங்க..

உக்ரைன் விவகாரத்தில் ஜ.நாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் இந்தியா எங்களை ஆதரிக்க வேண்டும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
 

Russia Ukraine Crisis updates

நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா,உக்ரைன் எல்லையில் சுமார் 1.50 லட்சம்  ராணுவ வீரர்களை குவித்ததால் எந்நேரமும் போர் சூழல் உருவாகும் அபாயம் இருந்து வந்தது. இந்நிலையில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டதையடுத்து, நேற்று ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர்தொடுத்தது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் அங்கு கடும் பதற்றம் காணப்படுகிறது.ரஷ்யா நடத்திய தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மொத்தம் 100க்கும் மேற்பட்டவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 316 பேர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று முழுவதும் உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரங்களில் ராணுவ நிலைகளை குறிவைத்து ரஷ்ய விமானப்படை குண்டுகளை வீசியது. தலைநகர் கீவில் ராணுவ நிலையை குறிவைத்து ரஷ்ய படைகள் முன்னேறி வரும் நிலையில், கீவ் நகரில் இன்றும் குண்டு மழை பொழிந்து வருகிறது.

மேலும் தலைநகர் கீவ்-யில் உள்ள செர்னோபில் அணு உலையையும் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவு அதிகரித்து வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 3 மைல் தொலைவில் ரஷ்யா ராணுவம் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.கீவ் நகரின் அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள் அருகே ரஷ்ய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஸ்னேக் தீவு அருகே போர்கப்பலில் இருந்த ரஷ்யா வீரர்கள் உக்ரைன் வீரர்களை சரணடையும் படி வற்புறுத்தியுள்ளனர்.ஆனால் ரஷ்யாவிடம் சரணடைய மறுத்து 13 உக்ரைன் வீரர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளனர்.இந்நிலையில் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா விமானநிலையங்கள் மற்றும் வான்வெளியில் பிரிட்டன் விமானங்கள் பறக்க ரஷ்யா தடைவிதித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக பிரிட்ட கூறிய நிலையில் ரஷ்யா பதலடி கொடுத்துள்ளது. மேலும் தங்களுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ள மேற்கத்திய நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்ட உள்ளிட்ட நாடுகளுக்க பொருளாதார தடை விதிக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது.ரஷ்யாவில் உள்ள உலோகங்கள், எரிவாயு உள்ளிட்ட முக்கிய மூலப் பொருட்களை மேற்கத்திய நாடுகள் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்உக்ரைன் விவகாரத்தில் ஜ.நாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் இந்தியா எங்களை ஆதரிக்க வேண்டும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.ரஷ்யாவிற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்,தொலைபேசியில் இரு நாட்டு தலைவர்களும் பேசினர்.உக்ரைனில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆலோசனை நடத்தியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios