Russia Ukraine crisis:பொருளாதார தடையெல்லாம் சமாளிக்க தயார்..ரஷ்யா பதிலடி..! உக்ரனையில் பதற்றம்..!
Russia Ukraine crisis:உக்ரைன் நாட்டில் 70 க்கும் மேற்பட்ட ராணுவ தளங்கள்,11 விமான தளங்கள் அழித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.மேலும் தங்கள் முன் இருக்கும் பொருளாதார சவால்களை சமாளிக்க தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
Russia Ukraine crisis:உக்ரைன் நாட்டில் 70 க்கும் மேற்பட்ட ராணுவ தளங்கள்,11 விமான தளங்கள் அழித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.மேலும் தங்கள் முன் இருக்கும் பொருளாதார சவால்களை சமாளிக்க தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய, ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு நேட்டோ அமைப்பில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காரணம், உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல், உக்ரைனில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பது என்று பல ரூபங்களில் ஆபத்து வந்துவிடும் என்று ரஷ்யா கருதுகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வந்தது. இந்நிலையில், உக்ரைன் மீது, ரஷ்யா வான்வெளி மற்றும் தரை வழி தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவியில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.தலைநகர் கீவ் நகரை ரஷிய படைகள் கைப்பற்றும் நிலை உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் விமானப்படை தளங்களை அழித்துவிட்டதாகவும் உக்ரைன் துறைமுகங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சூழலில் 100-க்கும் மேற்பட்ட தங்களின் ராணுவ வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
தலைநகர் கீவுக்குள் ரஷ்ய படைகள் நூழைந்துவிட்டதாக சொல்லபடுகிறது.உக்ரைன் நாட்டிற்கு படைகளை அனுப்பும் எந்த திட்டமும் தற்போது வரை இல்லை என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.ஆனால் போரை கைவிட்டு உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகள் திரும்ப வேண்டும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
அமெரிக்கா, ஜரோப்பிர நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்து வருகின்றன.இதற்கிடையில்உக்ரைனுக்கு உறுதியாக இருப்போம் என்று ஜி7 நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.உக்ரைன் நாட்டில் 70 க்கும் மேற்பட்ட ராணுவ தளங்கள்,11 விமான தளங்கள் அழித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.மேலும் தங்கள் முன் இருக்கும் பொருளாதார சவால்களை சமாளிக்க தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.