Russia Ukraine Crisis : நாட்டை காக்க ஆயுதம் எடுங்கள்- உக்ரைன் அதிபர்; ரஷ்யாவிடம் சரணடையும் இராணுவ வீரர்கள்?
நாட்டை பாதுகாக்க விரும்பும் அனைவருக்கும் ஆயுதம் கொடுக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வெலோதிமீர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைன் நாட்டு இராணுவ வீரர்கள் சரணடைந்து வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
நாட்டை பாதுகாக்க விரும்பும் அனைவருக்கும் ஆயுதம் கொடுக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வெலோதிமீர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைன் நாட்டு இராணுவ வீரர்கள் சரணடைந்து வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் இணைந்துள்ள நேட்டா அமைப்பதில் உக்ரை இணைவத்ற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, உக்ரை மீது போர்தாக்குதலை தொடங்கியுள்ளது.உக்ரை மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டதை அடுத்து,ரஷ்ய இராணுவ படைகள் உக்ரைனில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை ஈடுப்பட்டுள்ளது. தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வழிகிறது.உக்ரைன் தலைநகரம் கீவியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யா, உக்ரைனின் விமானப்படை தளங்களை அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.இதனிடையே தலைநகர் கீவ்-வில் தொடர் தாக்குதல் நடப்பதால் அங்கிருந்து பிற நகரங்களுக்கு படையெடுக்கும் சூழல் உருவாக்கியுள்ளது. மெட்ரோ நிலையங்கள்,சுரங்க பாதைகளில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.இன்னும் சில மணி நேரங்களில் கீவ் நகரை ரஷிய படைகள் கைப்பற்றும் நிலை உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
குண்டு மழைகளை பொழிந்து வரும் நிலையில்,அந்த வாய்ப்பை பயன்படுத்தி இரண்டு நகரங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், 100-க்கும் மேற்பட்ட தங்களின் ராணுவ வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.தற்போது துறைமுகங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தொடர்ந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் நாட்டை பாதுகாக்க விரும்பும் அனைவருக்கும் ஆயுதம் கொடுக்க தயாராக இருப்பதாக உக்ரைன் நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.உக்ரைன் நகரின் எல்லைகளை பாதுகாக்க தயாராகுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.மேலும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கும் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு போரில் ஈடுப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டு இராணுவ வீரர்கள் சரணடைந்து வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை தொடர்ந்து ஆயுதங்களை கீழே போட்டு விட்டு உக்ரைன் வீரர்கள் சரணடைந்து வருவதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது.