”நாங்க ஒண்ணும் சளைச்சவங்க இல்ல..!” ரஷ்யாவின் 5 ஜெட் விமானங்கள், ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது. ரஷ்யாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லுஹான்ஸ்க் நகரில் 5 போர் விமானங்களையும், ஒரு ஹெலிகாப்டரையும் வீழ்த்தியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Russia Ukraine crisis.. Ukrainian airbases, air defences destroyed

உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்த ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ரஷ்யாவின் 5 ஜெட் விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது என உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 

ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீது தாக்குதலை நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கியூ மற்றும் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் தொடங்கியது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பல உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதில், ரஷ்யா உக்ரைன் இடையிலான போரில் யாராவது தலையிட்டால் வரலாறு காணாத வகையில் பேரழிவு சந்திக்க நேரிடும் என அந்நாட்டு அதிபர் புதின் எச்சரித்துள்ளார். 

Russia Ukraine crisis.. Ukrainian airbases, air defences destroyed

இந்த தாக்குதல் குறித்து ரஷ்யா தரப்பில் உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தவில்லை. உக்ரைன் மீது நடத்தப்படுவது போர் அல்ல; ராணுவ நடவடிக்கை என விளக்கமளித்துள்ளது. ரஷ்யாவின் கொத்துக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களால் ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உக்ரைன் படைகள் திணறி வருவதாக தகவல் வெளியாகின. இதனையடுத்து, ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைனில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

ராணுவம் தனது வேலைகளை செய்து வருவதால் நாட்டு மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது. ரஷ்யாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லுஹான்ஸ்க் நகரில் 5 போர் விமானங்களையும், ஒரு ஹெலிகாப்டரையும் வீழ்த்தியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios