உக்ரைனின் 2 நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் 2 நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐ.நா மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ரஷ்யா, கடந்த பல மணி நேரமாக உக்ரைனில் முழு அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது. அதுதொடர்பான காட்சிகள் வந்துகொண்டிருக்கின்றன.தாக்குதல் நடத்திய ரஷ்யாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றையும் வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ஆனால் இதற்கு ரஷ்ய இராணுவம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து ரஷ்யா தாக்கும் நிலையில் அதற்கு தங்கள் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் பல்முனை தாக்குதல் நடத்திவரும் நிலையில்,அதிக மக்கள் உள்ள பகுதிகள் தங்கள் இலக்கு அல்ல எனவும் ரஷ்ய ராணுவ தெரிவித்துள்ளது.தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலால் தங்களது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்ய படையினர் இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.உக்ரைன் தலைநகர் கீவ் விமான நிலையத்தை குறிவைத்து ரஷ்ய படைகள் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகின்றன.கீவ் விமான நிலையம் மற்றும் ராணுவ தளங்களை ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்கி வருகிறது.

ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைனில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.இதற்கிடையில்,உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பல மணி நேரமாக உக்ரைன் மீது வான்வெளி தாக்குதல் நடத்திவந்த ரஷ்யா தற்போது, பாராசூட்கள் மூலம் நூற்றுக்கணக்கான வீரர்களை இறக்கி, நாட்டிற்குள் நுழைந்தும் தாக்குதலை தொடங்கியுள்ளது.

இந்நிலையில்,உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.குண்டு மழைகளை பொழிந்து வரும் நிலையில்,அந்த வாய்ப்பை பயன்படுத்தி இரண்டு நகரங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
