Ukraine-Russia War: 17 நாடுகள் நட்பு பட்டியலில் இருந்து நீக்கம்... ரஷ்யா அதிரடி முடிவு!!

ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து,  சிங்கப்பூர், உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா தற்போது நீக்கியுள்ளது. 

russia removed 17 countries from their friendly list

ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து,  சிங்கப்பூர், உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா தற்போது நீக்கியுள்ளது. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் உருகுலைந்தன. மேலும் பல உயிர்களும் பறிப்போயின. இந்த போதிலும் போர் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

russia removed 17 countries from their friendly list

இதை அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்தது. இதனிடையே உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதால் ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை, வான்வெளியில் விமானங்கள் பறக்கத்தடை, பல நிறுவனங்கள் தனது விற்பனையை ரஷ்யாவில் நிறுத்தியது உள்ளிட்ட பல்வேறு வகையில் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

russia removed 17 countries from their friendly list

இந்த நிலையில், 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா தற்போது நீக்கியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் பெயர், ஐஸ்லாந்து, ஜப்பான், மொனாக்கோ, மாண்டினீக்ரோ, நியூசிலாந்து, நார்வே, தைவான், சான் மரினோ, சிங்கப்பூர், எஸ் கொரியா, சுவிட்சர்லாந்து, உக்ரைன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது. இதனியையே, ரஷ்யா – உக்ரைன் இடையேயான நேரடி பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டாததால், இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios