Asianet News TamilAsianet News Tamil

உக்ரைன் போரில் அதிபர் புடினை விமர்சனம் செய்திருந்த ரஷ்ய பாப் பாடகர் உயிரிழப்பு!!

உக்ரைன் மீது போர் தொடுத்ததற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை விமர்சனம் செய்து இருந்த அந்த நாட்டின் பாப் பாடகர் ஐஸ் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Russia pop Star one who criticizes Putin war against Ukraine died
Author
First Published Mar 22, 2023, 4:13 PM IST

திமா நோவா என்ற திமித்ரி விர்குநவ் கிரீம் சோடா என்ற பெயரில் பாப் பாடல் குழு ஒன்றை நடத்தி வந்தார். இவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். உக்ரைன் மீது புடின் தொடுத்து இருக்கும் போரை விமர்சனம் செய்வதாக அந்தப் பாடல் அமைந்து இருந்தது. 

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை ஆற்றைக் கடந்து கொண்டு இருக்கும்போது, 35  வயதாகும் திமா நோவா, தவறி விழுந்தார். இவருடன் சென்று இருந்த இவரது சகோதரர் ரோமா மற்றும் இரண்டு நண்பர்களும் ஆற்றில் விழுந்தனர். இவர்களில் திமா, அவரது சகோதரர் ரோமா மற்றும் ஒரு நண்பர் மூவரும் ஆற்றில் மூழ்கி இறந்தனர். மற்றொரு நண்பர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சில் உயிரிழந்தார்.

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கிய கட்டிடம்.. அலறிய பொதுமக்கள்.. பாதிப்பு என்ன?

இவர்கள் எவ்வாறு ஆற்றில் விழுந்தனர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், இவர்கள் ஆற்றில் விழுந்தவுடன் ஆற்றில் ஏற்பட்ட நீரோட்டத்தினால் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று அந்த நாட்டின் செய்திகள் கூறுகின்றன. திமா மறைவுக்கு அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

திமா நோவா தனது பாடலில் புடினின் 1.3 பில்லியன் மதிப்பிலான அரண்மனையையும் விமர்சனம் செய்து இருந்தார். அந்தப் பாடலுக்கு அகுவா டிஸ்கோ என்றும் பெயரிடப்பட்டு இருந்தது. உக்ரைன் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டங்கள் அனைத்திலும் புடினுக்கு எதிரான பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ரஷ்யாவின் தெற்கில் பிளேக் கடலை ஒட்டி இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. இது ஊழல் பணத்தில் கட்டப்பட்டு இருப்பதாக திமா நோவா விமர்சனம் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபராக இருந்தபோது பெற்ற 117 பரிசுகளை மூடி மறைத்த டிரம்ப்!

Follow Us:
Download App:
  • android
  • ios