Russia Ukraine Crisis : உக்ரைன் மீது போர்: ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் ரஷ்ய அதிபர் புதின்
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கும், போர் தொடுக்கவும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இன்று ஆணையிட்டார்.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கும், போர் தொடுக்கவும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இன்று ஆணையிட்டார்.
முன்னாள் சோவியத் நாடான உக்ரைன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் படைப்பிரிவான நேட்டோவில் சேரவிருப்பம்கொண்டுள்ளது. ஆனால், உக்ரைன் நேட்டோவில் சேர ரஷ்யா அனுமதிக்கவில்லை. இதனால் உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் படை வீரர்களைத் திரட்டி ரஷ்யா போர் பயிற்சியில் ஈடுபட்டுவருவதால், உலகளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது தவிர உக்ரைன் நாட்டுக்குள் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுவரும் பிரிவினருக்கும் ரஷ்யா ஆதரவு தெரிவித்து கொம்புசீவிவிட்டுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உக்ரைனின் கிழக்குப்பகுதியில் இருக்கும் டான்பாஸ் மண்டலத்தில் உள்ள டோனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய இரு மாநிலங்களில் உள்ள ரஷ்ய ஆதரவாளர்கள் அதிபர் புதினை சமீபத்தில் சந்தித்து தங்கள் மாநிலங்களை சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கக் கோரினர். இதன்படி, டோனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய இரு மாநிலங்களையும் தன்னாட்சி பெற்றதாக சுதந்திரநாடாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார்.
ரஷ்யாவுக்கும்-உக்ரைனுக்கும் ஏற்கெனவே போர் பதற்றம் தீவிரமாக இருக்கும் நிலையில் அதிபர் புதினின் இந்த செயல் எரியும் தீயில் எண்ணெய்வார்க்கும் போல் இருந்தது.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்தன. ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன் ஆகியவை நிதித்தடைகள் விதித்துள்ளன.
இதற்கிடைய அன்னிய மண்ணில் ராணுவ நடவடிக்கை தொடர ரஷ்ய நாடாளுமன்றம் அதிபர் புதினுக்கு அனுமதியளித்தது. இந்நிலையில் இந்தியநேரப்படி காலை 6.30மணிக்கு உக்ரைன் மீது போர் தொடுக்கவும், ராணுவ நடவடிக்கை எடுக்கவும் ரஷ்ய அதிபர் புதின் ராணுவத்துக்கு உத்தரவிட்டார்.
ரஷ்ய தொலைக்காட்சியில் மக்களுக்கு அதிபர் விளாதிமிர் புதின் பேசியதாவது:
உக்ரைனை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற எண்ணம் ரஷ்யாவுக்கு கிடையாது. உக்ரைனில் இருக்கும் மக்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ராணுவ நடவடிக்கை எடுக்கபக்படுகிறது. உக்ரைனில் ரத்தம் சிந்திப்பட்டால் அதற்கு பொறுப்பு உக்ரைன் அரசுதான்” எனத் தெரிவித்தார்