வங்கிக்குள் நுழைந்த காளை.. அதிர்ச்சியில் தெறித்து ஓடிய பொதுமக்கள்.! - வைரல் வீடியோ
வங்கி வளாகத்துக்குள் திடீரென காளை புகுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் தெறித்து ஓடினர்.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் அருகே தனியார் வங்கி ஒன்று செயல்பட்டுவருகிறது. அந்த வங்கிக்குள் நேற்று பகல் நேரத்தில் காளை ஒன்று புகுந்தது. இதனை சற்றும் எதிர்பாராத அங்கிருந்த வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காளையை பார்த்த வாடிக்கையாளர்கள் சிலர், சுவரின் பின்னால் ஒழிந்து கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிரடி திருப்பம் !
காளை வங்கி வெளியே நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் சேதமடைந்ததாகத் தெரிகிறது. மேலும் காளையானது ஒருவரை லேசாக தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிறகு வங்கி அலுவலகத்தில் நுழைந்த காளையை மாநகர கால்நடைத்துறை பணியாளர்களால் பிடிக்கப்பட்டது. சாலையில் சுற்றித்திரிந்த காளை திடீரென வங்கிக்குள் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..ஆண் நண்பர்களுடன் உல்லாசம்.. போதையில் தள்ளாடிய தோழிகள் - காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த அதிர்ச்சி