Asianet News TamilAsianet News Tamil

செவ்வாய் கிரகத்தில் 'தங்கப் பாறைகளா'? ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

செவ்வாய் கிரகத்தில் தங்க நிறத்திலான பாறை ஒன்றை கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' அறிவித்துள்ளது.

Rock cliffs' on Mars Surprisingly scientists!
Author
Chennai, First Published Dec 8, 2018, 6:15 PM IST

செவ்வாய் கிரகத்தில் தங்க நிறத்திலான பாறை ஒன்றை கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' அறிவித்துள்ளது.

நாசா சார்பில் செவ்வாக் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள கியூரியாசிட்டி ரோவர் ஆய்வு எந்திரம், அங்கு தங்க நிறத்திலான பாறையைக் கண்டறிந்துள்ளது.

Rock cliffs' on Mars Surprisingly scientists!

இது பற்றி நாசா ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "தங்க நிறத்திலான அந்த மர்ம பொருள் தங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது என்னவென்பது இதுவரை அறியப்படாத நிலையில், எங்களுக்குள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த பாறைக்கு 'லிட்டில் கோலன்சே' எனப் பெயரிட்டுளோம். அந்த மர்மமான பொருளை பற்றிய புதிரை தீர்க்க வேண்டுமெனில், அதன் ரசாயக் கலவை ஆய்வு தேவைப்படுகிறது " எந் தெரிவித்துள்ளனர்.

விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள கியூரியாசிட்டு ரோவர் எந்திரத்தில், சோலார் உணர்திறன் கொண்ட கேமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் வேதியியல் தூண்டலை நிகழ்த்தி, குறிப்பிட்ட மர்மப்பொருள் பற்றிய ரகசியத்தை கண்டறிய உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

Rock cliffs' on Mars Surprisingly scientists!

அந்த பாறை பளபளப்பாக இருப்பதால், விண்கல்லாக இருக்கலாம் எனவும் அதே போல் அது தங்க பாறையாக கூட இருக்கலாம் எனவும்  விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். 

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பியுள்ள கியூரியாசிட்டி ரோவர் எந்திரம், ஏறக்குறைய ஒரு காரின் அளவிலானது. அதில் 7 அதி நீளத்துக்கு கை போன்ற தோற்றத்தில் அமைக்கப்பற்றிருக்கிறது.  இணைப்பு, பாறைகளை ஆவியாகும்  ஒரு லேசர் கருவி மற்றும் 17 கேமராக்கள் உள்ளிட்ட 10 நவீன ஆய்வு சாதனங்கள் உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios