பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமா உயிரிழந்தனர். 

பாகிஸ்தானின் ஸ்வாத் நகரில் இருந்து லாகூர் நோக்கி 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து இஸ்லாமாபாத் அருகே சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக உடனே போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் பேருந்து அதிவேகத்தில் சென்றதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.