Asianet News TamilAsianet News Tamil

பிரட்டன் பிரதமருக்கான போட்டியின் இறுதி கட்டத்தில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ்… வெற்றிப்பெறப்போவது யார்?

பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் முன்னாள் பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

rishi sunak wins final round of tory mps voting with liz truss in last leg of uk pm race
Author
UK, First Published Jul 20, 2022, 11:39 PM IST

பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் முன்னாள் பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் சுற்றில் ரிஷிக் சுனக் எதிர்பார்த்தது போலவே முன்னிலை வகித்த நிலையில், 2-வது சுற்றிலும் 101 வாக்குகள் பெற்று ரிஷி சுனக் முதலிடம் பிடித்துள்ளார். ரிஷி சுனக்கிற்கு கடும் போட்டியாளராக உள்ள முன்னாள் வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டவுட்ன் 83 வாக்குகளும், வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் 64 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருந்தனர். இதனால் போட்டிக்களம் அனல் பறந்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தல் சுற்றிலும் ரிஷி சுனக் வெற்றி பெற்றார். தற்போது நடந்த மூன்றாம் சுற்றில் ரிஷிக்கு 115 வாக்குகள் கிடைத்தன.

இதையும் படிங்க: பிரிட்டன் பிரதமர் போட்டியில் முந்தும் ரிஷி சுனக்..இவர்தான் அடுத்த பிரதமரா ?

rishi sunak wins final round of tory mps voting with liz truss in last leg of uk pm race

அவரைத் தொடர்ந்து வர்த்த அமைச்சர் பென்னி மோர்டண்ட் 82 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். வெளியுறவு செயலாலர் லிஸ் ட்ரஸ் 71 வாக்குகள் பெற்றும் மூன்றாம் இடம் பிடித்தார். முன்னாள் சமத்துவத் துறை அமைச்சர் கெமி 58 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார். டோரி எம்.பி.க்களின் ஐந்தாவது மற்றும் இறுதி வாக்களிப்புச் சுற்றில் சுனக் 137 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் உள்ள டிரஸ் 113 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றார். வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டான்ட் 105 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறினார். இதை அடுத்து திங்களன்று பிபிசியில் திட்டமிடப்பட்ட நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் சுனக் மற்றும் ட்ரஸ் இருவரும் இப்போது நேருக்கு நேர் மோத உள்ளனர். 

இதையும் படிங்க: அடுத்த பிரிட்டன் பிரதமர் இவரா ? ரேஸில் முந்தும் இந்திய வம்சாவளி.. யார் இந்த ரிஷி சுனக் ?

rishi sunak wins final round of tory mps voting with liz truss in last leg of uk pm race

இந்த நிலையில் சுனக் தனது டிவிட்டர் பக்கத்தில், எனது சக ஊழியர்கள் இன்று என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. நாடு முழுவதும் எங்கள் செய்தியை வழங்க நான் இரவும் பகலும் உழைப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதேபோல் டிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், என் மீது உங்கள் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. முதல் நாளிலிருந்தே நான் களமிறங்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கன்சர்வேடிவ் நாடாளுமன்றக் கட்சிக்குள் சுனக்கின் புகழ், அவரது முன்னணி எதிரிகளுக்கு ஆதரவாகக் காட்டப்படும் பரந்த உறுப்பினர் தளத்தின் கருத்துக்களுடன் ஒத்துப் போவதாகத் தெரியவில்லை. திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் 725 கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் சமீபத்திய YouGov கருத்துக்கணிப்பு, சுனக்கை 54 சதவிகிதம் முதல் 35 சதவிகிதம் வரை ட்ரஸ் தோற்கடிப்பார் என்றும், மோர்டான்ட் அவரை 51 சதவிகிதம் முதல் 37 சதவிகிதம் வரை தோற்கடிப்பார் என்றும் காட்டியது. 

Follow Us:
Download App:
  • android
  • ios