அமெரிக்காவில் பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் மோதிய விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் அண்மையில் நடந்த மோசமான விமான விபத்துகள் குறித்து பார்க்கலாம்.

அமெரிக்காவில் விமான விபத்து 

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 67 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பயணிகள் விமானம் நொறுங்கியே வேகத்தில் போடோமேக் ஆற்றில் விழுந்தது. அமெரிக்காவில் நடந்த விமான விபத்துகளில் மோசமான விபத்துகளில் ஒன்றாக இது பதிவாகியுள்ளது.

சமீபத்திய சில ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த மோசமான விமான விபத்துகள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். 

பிப்ரவரி 12, 2009: நியூயார்க்கிலிருந்து பஃபலோ என்ற சிறிய நகரத்திற்கு பறந்து கொண்டிருந்த ஒரு கோல்கன் ஏர் பாம்பார்டியர் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 49 பயணிகள் உயிரிழந்தனர். 

ஜனவரி 15, 2009: 150க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற 'யுஎஸ் ஏர்வேஸ் ஏர்பஸ் ஏ320' விமானத்தின் மீது பறவைக் கூட்டங்கள் மோதின. ஆனால் விமானி சாதுர்யமாக செயல்பட்டு ஹட்சன் ஆற்றில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். விமனத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்படனர். 

கடலில் விழுந்த விமானம் 

ஆகஸ்ட் 27, 2006: கென்டக்கியின் லெக்சிங்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உள்ளூர் விமானம் ஒன்று தவறான ஓடுபாதையில் சென்று விபத்துக்குள்ளானது. அதில் இருந்த சுமார் 50 பேர் பலியாயினர்.

டிசம்பர் 19, 2005: மியாமியையும் பஹாமாஸில் உள்ள ஒரு தீவையும் இணைக்கும் வகையில் இயக்கப்பட்ட ஓஷன் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 'க்ரம்மன் ஜி-73டி மல்லார்ட்; ஹைட்ரோபிளேன் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 18 பயணிகள் உயிரிழந்தனர்.

அக்டோபர் 19, 2004: அமெரிக்கன் கனெக்‌ஷனால் இயக்கப்படும் 'பிஏஇ ஜெட்ஸ்ட்ரீம் 32' விமானம் மிசோரியின் கிர்க்ஸ்வில்லி அருகே மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது. இரண்டு விமானிகள் உள்பட 13 பேர் பலியாயினர்.

ஜனவரி 8, 2003: வட கரோலினாவின் சார்லோட் மற்றும் தென் கரோலினாவின் கிரீன்வில்லி இடையே இயக்கப்படும் 'யுஎஸ் ஏர்வேஸ் பீச்கிராஃப்ட் 1900' ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு ஹேங்கரில் மோதியது. 2 விமானிகள் உள்பட மொத்தம் 19 பேர் கொல்லப்பட்டனர்.

மிக மோசமான விபத்து இதுதான் 

நவம்பர் 12, 2001:  நியூயார்க்கிலிருந்து செயிண்ட்-டொமிங்குவுக்குப் பறந்து கொண்டிருந்த 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஏ௩00' விமானம் ஜேஎஃப்கே விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த 260 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் பல வீடுகளும் சேதம் அடைந்தன. அந்த வீடுகளில் வசித்த 5 பேரும் இறந்தனர். நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த இரண்டு மாதங்களில் நடந்த இந்த விமான விபத்து அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான விபத்தாக பார்க்கப்படுகிறது.

ஜனவரி 13, 1982: 'ஏர் புளோரிடா போயிங் 737௨22' ரக விமானம் பனிப்புயலின் தாக்கத்தால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே போடோமாக்கில் ஒரு பாலத்தில் மோதி, பின்னர் ஆற்றில் மூழ்கியது. இந்த விபத்தில் பாலத்தில் இருந்த நான்கு வாகன ஓட்டிகள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டனர்.