காலில் விழாதக் குறையாய் மோடியிடம் கெஞ்சிக் கதறும் இம்ரான் கான்!
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு பிரதமர் மோடியை கிட்டத்தட்ட கெஞ்சாத குறையாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைத்து வருகிறார்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு பிரதமர் மோடியை கிட்டத்தட்ட கெஞ்சாத குறையாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைத்து வருகிறார்.
பாகிஸ்தான் – இந்தியா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது. மேலும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக பாகிஸ்தானுக்கு இந்தியா சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஏற்கனவே பாகிஸ்தான் அரசு பணப்பற்றாக்குறையால் தவித்து வருகிறது.
சீனா, சவூதி என ஒவ்வொரு நாடாக சென்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நிதி உதவி கோரி வருகிறார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு பாகிஸ்தானுக்கு உதவிகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவும் பாகிஸ்தானுக்கான நிதி உதவியை நிறுத்தியுள்ளது. மேலும் இந்தியா உடனான வர்த்தக உறவிலும் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் பாகிஸ்தான் அரசாங்கத்தையே நடத்த முடியாத நிலையில் இம்ரான் கான் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்று 100 நாட்கள் ஆகியுள்ளது. இதனை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான் கான், இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் ஆர்வத்துடன் உள்ளதாக கூறியுள்ளார். பழைய பிரச்சனைகளை நினைத்துக் கொண்டே இருந்தால் முன்னேறிச் செல்ல முடியாது என்பதால் பேச்சுவார்த்தைக்கு இந்தியா சம்மதிக்க வேண்டும் என்றும் இம்ரான் கான் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக காஷ்மீர் சிக்கல் தீர்ந்து விட்டால் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்றும் இம்ரான் கான் கூறியிருந்தார். ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தும் வரை பேச்சுவார்த்தை என்பது சாத்தியம் இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக கூறி வருகிறது. தற்போதைய சூழலில் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருவதற்காக இம்ரான் கான் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.