சட்டவிரோத செயல்களில் ஈடுபட விரும்பவில்லை: கனடா பிரதமரின் பாதுகாப்பு குழு அதிகாரி பதவி விலகல்!
சட்டவிரோத பணிகளைச் செய்ய விரும்பவில்லை என்பதால் பிரதமரின் பாதுகாப்புக் குழு பணியை ராஜினாமா செய்வதாக கார்போரல் புல்போர்ட் கூறியுள்ளார்.
இந்தியா கனடா இடையேயான மோதல் போக்கினால் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், கனடா பிரதமரின் தனி பாதுகாப்புக் குழு அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது சத்தியப் பிரமாணத்தை மீறி சட்டவிரோத பணிகளைச் செய்ய விரும்பவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கார்போரல் புல்போர்ட் என்ற அந்த அதிகாரி, நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது "இது நிச்சயமாக திட்டமிட்டு எடுத்த முடிவு அல்ல" என்று கூறியுள்ளார். பாதுகாப்புப் குழு அதிகாரியின் கடமைகள் என்னென்ன என்பது குறித்து சட்டங்களைப்ப ஆராய்ந்த பின்பு இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும் புல்போர்ட் விளக்கியுள்ளார்.
மாறி மாறி குறைகூறும் இந்தியா - கனடா! அமெரிக்காவின் ஆதரவு யாருக்குக் கிடைக்கும்?
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் 18ஆம் தேதி கனடாவின் சர்ரே, பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ பேசியதை அடுத்து இந்தியா - கனடா இடையே மோதல் வெடித்தது.
இரு நாடுகளும் தங்கள் நாடுகளில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேன உத்தரவிட்டன. பின்னர், ட்ரூடோ தனது கருத்துகளில் இந்தியாவைக் குற்றம்சாட்டவில்லை என்றும் இந்தியா இந்த விவகாரத்தைக் நல்ல விதமாகக் கையாண்டிருக்கலாம் என்றுதான் கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால், அதை ஏற்பாகத இந்தியா கனடா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்றும் கனடா தனது நற்பெயரைக் காத்துக்கொள்ள வேண்டும் என்றும் விமர்சித்தது.
வெள்ளிக்கிழமை மீண்டும் இந்தியா மீதான தன் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்தும் விதமாகப் பேசியிருக்கிறார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையின் பின்னணியில் இந்தியா உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை கனடா சில வாரங்களுக்கு முன்பே இந்தியாவுடன் பகிர்ந்துகொண்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அப்படி எந்த ஆதாரங்களும் பகிரப்படவில்லை என்று இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் 143 நாட்களுக்குப் பின் மீண்டும் மொபைல் இன்டர்நெட் சேவை தொடக்கம்