Asianet News TamilAsianet News Tamil

இந்தியா, யுஏஈ வர்த்தகத்திற்கு இரு நாடுகளின் நாணயங்கள் பயன்படுத்த பிரதமர் மோடி முன்பு ஒப்பந்தம்!!

இந்திய ரிசர்வ் வங்கியும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்திய வங்கியும் தங்களது நாணயங்களை இரண்டு நாடுகளின் வர்த்தகங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

RBI, Central Bank of the UAE signed  to Promote local currencies for cross-border transactions
Author
First Published Jul 15, 2023, 4:56 PM IST

இந்திய ரிசர்வ் வங்கியும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்திய வங்கியும் தங்களது நாணயங்களை இரண்டு நாடுகளின் வர்த்தகங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் இருதரப்பு பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இருதரப்பு, எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின்  திர்ஹாம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக ஒரு கட்டமைப்பை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ரிசர்வ் வங்கியும் யுஏஇ மத்திய வங்கியும் ஜூலை 15 அன்று கையெழுத்திட்டன. 

இரண்டு மத்திய வங்கிகளும் ஒன்றுக்கொன்று பணம் செலுத்துதல் மற்றும் குறுஞ்செய்திகளை பகிர்ந்து கொள்ளுதல் அமைப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இருதரப்பு பரிவர்த்தனைகளுக்கு ரூபாய், திர்ஹாம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பில் யுஏஈ-ன் மத்திய வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் உள்ளூர் நாணயத்தை பயன்படுத்துவதற்கான தீர்வு ஏற்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்து நடப்பு கணக்கு பரிவர்த்தனைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட மூலதன கணக்கு பரிவர்த்தனைகளை உள்ளடக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

எனது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை வெற்றியுடன் முடித்துக் கொண்டுள்ளேன். இருநாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்பான வரவேற்பு அளித்த ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios