கனடாவில் உள்ள மிசிசாகா ராமர் கோயில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்தியத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடாவின் மிசிசாகா நகரில் உள்ள ராமர் கோயில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
கனடா நாட்டில் டொரோன்டோ நகருக்கு அருகே உள்ள மிசிசாகா நகரில் ராமர் கோயில் ஒன்று உள்ளது. அதை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அந்தக் கோயிலைச் சேதப்படுத்தி, காலிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்களை எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட இந்திய தூதரகம், “மிசிசாகாவில் உள்ள ராமர் கோயில் சேதப்படுத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனடா அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
New Zealand earthquake: நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தச் சம்பவம் தொடர்பாக மிசிசாகா ராமர் கோயில் நிர்வாகம் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “மிசிசாகா ராமர் கோயில் சென்ற 13ஆம் தேதி இரவு சேதப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வு எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் பிராம்ப்டனில் உள்ள இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டொரோன்டோவில் உள்ள சுவாமி நாராயணன் கோயில் சேதப்படுத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களை நடந்தியதிலும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்பு இருந்தது.
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியாவில் சீக்கியர்கள் அதிகமாக வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தை காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக ஆக்கவேண்டும் என்று கோருகிறார்கள். இந்த பிரிவினையை இந்திய அரசு உறுதியாக எதிர்க்கிறது. ஆனால், கனடா அரசு காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்ககு ஆதரவு கொடுத்து வருகிறது என்று குற்றச்சாட்டு உள்ளது.
