Asianet News TamilAsianet News Tamil

ரபேல் போர்விமானங்கள் இந்திய வருகை... தொடை நடுங்கி பதறித்துடிக்கும் பாகிஸ்தான்..!

ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்துள்ளதால் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்தியா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என அண்டை நாடான பாகிஸ்தான் பதறித்துடித்து வருகிறது. 

Rafale warplanes arrive in India ... Pakistan shakes its head
Author
pakistan, First Published Jul 31, 2020, 11:25 AM IST

ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்துள்ளதால் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்தியா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என அண்டை நாடான பாகிஸ்தான் பதறித்துடித்து வருகிறது. Rafale warplanes arrive in India ... Pakistan shakes its head

பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் விமானங்களில், முதல் கட்டமாக 5 விமானங்கள் கடந்த 29ம் தேதி இந்தியா வந்தடைந்தன. ஹரியானா மாநிலம், அம்பாலா விமான படை தளத்தில் ரபேல் விமானங்கள் கம்பீரமாக தரையிறங்கின. கடந்த 1997ல் சுகோய் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டதற்குப் பிறகு 22 ஆண்டுகளுக்குப் பிறகு இறக்குமதியாகும் முதலாவது போர் விமானமான ரபேல், எதிரியின் ரேடார் கண்களுக்கு புலப்படாது. விமானந்தாங்கி கப்பல் அல்லது கடலோர தளங்களில் இருந்து பறந்து உயரக் கூடியது. 

Rafale warplanes arrive in India ... Pakistan shakes its head

ளவு பார்த்தல், வான்வெளி பாதுகாப்பு, உள் நுழைந்து தாக்குதல், அணு ஆயுத திறன், எதிரி போர்க்கப்பல்களை தாக்கும் திறன் உள்ளிட்ட அனைத்து விதமான போர் நடவடிக்கைகளையும் ரபேலால் மேற்கொள்ள முடியும். ரபேல் போர் விமானம் இந்தியாவிற்கு வந்ததால், நம் ராணுவத்தின் பலம் கூடியுள்ளது.

இந்நிலையில், ரபேலின் வருகையால் அண்டை நாடான பாகிஸ்தான் அலறி வருகிறது. அதன் வெளிப்பாடாக, ரபேல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஆயிஷா பரூக்கி, ’’ரபேல் போர் விமானங்கள், அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்குதல் நடத்தக் கூடியவை. பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்தியா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது’’என விரக்தி தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios