Baltimore Bridge Collapse : இந்தியர்களை கேலி செய்யும் வகையில் வெளியான கார்ட்டூன் - கொதித்துப்போன இணையவாசிகள்!
Baltimore Bridge Collapse : சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள பிரபலமான பாலம் ஒன்று, கப்பல் ஒன்று மோதி உடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த கப்பலை இந்தியர்கள் சில தான் இயக்கி வந்ததாக கூறப்படுகிறது.
பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தில் கட்டுப்பாட்டை மீறி வந்த சரக்கு கப்பல் ஒன்று மோதியதில், 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உட்பட பலர் கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களை பாராட்டி வரும் நிலையில், அந்த சம்பவத்தை சித்தரிக்கும் வகையில் 'இனவெறி'யோடு ஒரு கார்ட்டூன் வெளியாகி புயலை கிளப்பியுள்ளது.
சிங்கப்பூர் நாட்டு கொடியை கொண்ட அந்த கப்பல், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மின்சாரத்தை இழந்த நிலையில், அதன் எதிரே இருந்த பாலத்தை ஆதரிக்கும் கான்கிரீட் தூணில் மோதியது. வெகு சில நொடிகளில் ஏறக்குறைய முழு பாலமும் இடிந்து விழுந்தது. இதில் பாலத்தின் மீது இருந்த வாகனங்கள் சட்டென கடலுக்குள் விழுந்தது.
கருந்துளை ஆராய்ச்சியில் புதிய மைல்கல்! EHT தொலைநோக்கி பதிவுசெய்த புதிய படங்கள்!
அந்த கப்பலின் பணியாளர்களை அதிபர் பிடென் பாராட்டினார், அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் அவர்களின் உடனடி அபாய அழைப்பு தான் பல உயிர்களை காப்பாற்றியது என்று அவர் கூறினார். பாலத்தின் போக்குவரத்தை மூடுவதற்கு அதிகாரிகளைத் தூண்டியது அவர்கள் தான, இது உயிர்களைக் காப்பாற்றும் செயல் என்று அவர் பாராட்டினார்.
ஆனால் இந்த சூழலில் இந்தியர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு "வெப்காமிக்" இந்த சம்பவத்தை சித்தரிக்கும் கார்ட்டூனைப் பகிர்ந்துள்ளது. அனிமேஷன் செய்யப்பட்ட அந்த வீடியோவில், கப்பலில் உள்ள பணியாளர்கள், இடுப்பில் மட்டுமே ஆடை அணிந்த, ஒழுங்கற்ற மனிதர்களைக் காட்டுகிறது.
மேலும் அந்த கப்பலின் கேபினில் இறுதியாக இதுதான் நடந்திருக்கும் என்றும் கூறி, இந்திய மொழி வழக்கத்தை கொண்ட சிலர் உரையாடிக்கொள்வதை போல அந்த வீடியோ அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் இந்தியர்கள் மீது வெறுப்பை காட்டும் ஒரு கார்டூனாக அது அமைந்துள்ளது. மேலும் இந்த கார்ட்டூன் வீடியோ வைரலாகப் பரவி சுமார் 4.2 மில்லியன் பார்வைகளையும் 2000 கமெண்டுகளையும் பெற்றுள்ளது.
இந்தக் சமூக ஊடக கணக்கு, இந்தியர்களை இனவெறியுடன் சித்தரிப்பதற்காக மட்டுமல்ல, கப்பல் ஊழியர்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காகவும் விமர்சிக்கப்படுகிறது. மேலும் இந்த கார்ட்டூனைப் பகிர்ந்த இந்திய பொருளாதார நிபுணர் சஞ்சீவ் சன்யால், இந்த சம்பவத்தின் போது கப்பலை உள்ளூர் கப்பல் விமானி இயக்கியிருக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
"கப்பல் பாலத்தில் மோதிய நேரத்தில், அதற்கு உள்ளூர் விமானி இருந்திருப்பார். எப்படியிருந்தாலும், கப்பல் அதிகாரிகள், பிற அதிகாரிகளை எச்சரித்துள்ளனர், அதனால் தான் உயிரிழப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தன. அந்த நகர மேயர் கூட உண்மையில் நன்றி தெரிவித்துள்ளார்.. உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் எச்சரிக்கையை எழுப்பியதற்காக இந்திய குழுவினரை அவர் "ஹீரோக்கள்"," என்று அழைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் அந்த கார்ட்டூனை பகிர்ந்த நிறுவனத்திற்கு கடுமையாக விமர்சனங்கள் எழுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.