இங்கிலாந்து ராணியின் கணவர் காலமானார்... சோகத்தில் மூழ்கியது பக்கிங்ஹாம் அரண்மனை...!
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் மரணமடைந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் மரணமடைந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இன்று காலமானார், அவருக்கு வயது 99. வின்ஸ்டர் அரண்மனையில் உயிர் பிரிந்ததாக எலிசபெத் ராணி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றிலேயே மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் பிலிப் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பிலிப், தன்னுடைய வின்ஸ்டர் அரண்மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானதாக குயின் எலிசபெத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த உலக தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.
இங்கிலாந்தின் ராணியாக எலிசபெத் முடிசூட்டிக் கொள்வதற்கு 5 ஆண்டுகள் முன்னதாக 1947ம் ஆண்டு இளவரசர் பிலிப்பை திருமணம் செய்து கொண்டார். இளவரசர் பிலிப் - ராணி எலிசபெத் தம்பதிக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். அவர்களுடைய பிள்ளைகளான 8 பேரக்குழந்தைகள், அவர்களுடைய 10 குழந்தைகள் (கொள்ளு பேரக்குழந்தைகள்) உள்ளனர்.