bangladesh fuel hike: வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் விலை 51% அதிகரிப்பு: பங்குகளுக்கு படையெடுத்த மக்கள்

வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல்விலை 51 சதவீதம் உயர்த்தப்பட்டதையடுத்து, மக்கள் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர்.  இந்த விலை உயர்வுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர்.

Protests erupt in Bangladesh following a 52 percent increase in fuel prices.

வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல்விலை 51 சதவீதம் உயர்த்தப்பட்டதையடுத்து, மக்கள் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர்.  இந்த விலை உயர்வுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர்.

ஆசையா போட்ட டாட்டூவால் வந்த வினை… கதறும் ஆஸ்திரேலியா மாடல் அழகி!!
வங்கதேசம் சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுபோன்ற அளவு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதில், இவ்வளவு பெரிய விலை உயர்வு இப்போதுதான் முதல்முறையாகும்.இலங்கையில் ஏற்பட்ட அதேநிலை வங்கதேசத்துக்கு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

இதன்படி டீசல் விலை லிட்டருக்கு 34 டாகா அதிகரித்து ரூ.95.35 ஆகவும், பெட்ரோல், 46டாகா அதிகரித்து,ரூ.108.66ஆகவும் உயர்ந்துள்ளது. 14 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலைரூ.1,150 ஆக உயர்ந்துள்ளது.

sri lanka crisis: இலங்கை பொருளாதார சிக்கல் இன்னும் ஓர் ஆண்டு நீடிக்கும்: அதிபர் விக்ரமசிங்கே குமுறல்


பெட்ரோல், டீசல் விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டதையடுத்து, பெட்ரோல் பங்க்குகலில் மக்கள் கூட்டம்கூட்டமாகப் படையெடுத்து வாங்கினர். 


ஆசியாவில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள வங்கதேசம், கடந்த சிலஆண்டுகளாக கடும் பணவீக்கத்தை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் உக்ரைன் ரஷ்யா போருக்குப்பின் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால், பணவீக்கம் 7 சதவீதத்தை எட்டியுள்ளது. இறக்குமதி அதிகரித்து அதற்கு பணம் செலுத்த முடியாததால், சர்வதேச செலவாணி நிதியம் ஆகியவற்றிடம் இருந்து கடனுதவியை வங்கதேசம் கோரியுள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை 52சதவீதம் உயர்த்தப்பட்டதையடுத்து, அரசுக்கு எதிதராக பல்வேறு நகரங்களிலும் போராட்டம் வெடித்தது. தாகாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் முன் மாணவர்கள்அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

 

இந்த விலைவாசி உயர்வையடுத்து, தனியார் பேருந்து உரிமையாளர்களும் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசிக்கு தடை: பதிலடி தரத் தொடங்கியது சீனா
வங்கதேச பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறுகையில் “ சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வங்கதேச பெட்ரோலியக் கழகம், ஏறக்குறைய 800 கோடி டாலர் இழப்பில் செல்கிறது. புதிய விலை உயர்வு அனைவராலும் தாங்கமுடியாததுதான். ஆனால், இதைவிட்டால் வேறு வழியில்லை. மக்கள்  பொறுமையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios