விவசாயத்திற்கு உரமாக்கப்படும் கைதிகளின் உடல்கள்... சர்வாதிகார ஆட்சியில் அள்ள அள்ளக் குறையாத சாகுபடி..!

பயிர்களை வளமாக வளர்க்க  இயற்கை உரமாக அரசியல் கைதிகளின் சடலங்களை வட கொரியா  பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. 

Prisoners' bodies transformed into agriculture

பயிர்களை வளமாக வளர்க்க  இயற்கை உரமாக அரசியல் கைதிகளின் சடலங்களை வட கொரியா  பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. 

மிகக்கொடூரமான சர்வாதிகாரி கிம் ஜாங் உன் தலைமையிலான வட கொரியாவில், சமீபத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பயிர்களின் சாகுபடி மிகப்பெரிய உயர்வை கண்டது. ஆனால், அதற்கு பின் பயங்கரமான செயல்பாடுகள் இருப்பது அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இதுகுறித்து கிம் -இல் என்கிற புனைப்பெயரைப் பயன்படுத்திய முன்னாள் கைதி, பியோங்யாங்கிற்கு வடக்கே அமைந்துள்ள கெய்கோன் வதை முகாமின் நரகத்திலிருந்து தப்பியபின் கொடூரமான சம்பவங்களை கூறியுள்ளார். Prisoners' bodies transformed into agriculture

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தனது ஏவுகணை சோதனைகளை முடுக்கிவிட்ட நிலையில், வட கொரியா ஏற்கனவே சர்வதேச கண்டனத்தை எதிர்கொண்டு வருகிறது. வட கொரியா இந்த உலகில் தனி ஒரு உலகமாக செயல்பட்டு வருகிறது. வடகொரியா நிலங்கள் அதிக உரமூட்டப்பட்டவை. விவசாயம் அங்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதற்கு காரணம் புதைக்கப்பட்ட மனித உடல்கள் இயற்கை உரங்களாக செயல்படுகின்றன.Prisoners' bodies transformed into agriculture

மக்களை மலைப்பகுதிகளில் கூட புதைத்துள்ளனர். ஒருமுறை,  சிறுமி ஒருவர் மலையில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது புதைக்கப்பட்ட பிணத்தின் ஒரு கை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்துள்ளார். புதைக்கும்போது அரைகுறையாக சரியாக மறைக்க மறந்துவிட்டார்கள் எனக்கூறியுள்ளார்.

வடகொரிய மனித உரிமை குழுவின் நிர்வாக இயக்குனர் கிரெக் ஸ்கார்லடோயு கூறுகையில், ஒரு புதிய தொற்றுநோய்க்கு மத்தியில் கூட, கிம் ஆட்சியின் குற்றங்களில் இருந்து விடுபடவில்லை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.Prisoners' bodies transformed into agriculture

இது வட கொரியா மக்களுக்கு எதிராக கற்பனை செய்யமுடியாத கொடுமைச் செயல்களைச் செய்வதன் மூலம் தன்னைக் காத்துக் கொண்ட ஒரு ஆட்சி" என்று அவர் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios