70 ஆண்டுகளுக்கு பிறகு.. பிரிட்டன் அரசராக முடிசூட்டிக்கொண்டார் 3ம் சார்லஸ் !!
70 ஆண்டுக்கு பின் லண்டன் நகரமே கோலாகலம் பூண்டுள்ளது. பிரிட்டன் மன்னராக இன்று முடிசூட்டிக்கொண்டார் 3ம் சார்லஸ்.
பிரிட்டன் ராணியாக இருந்த 2ம் எலிசபெத் கடந்த ஆண்டு காலமானார். இதையடுத்து பிரிட்டன் மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மகன் 3ம் சார்லஸ் இன்று அதிகாரப்பூர்வமாக முடிசூட்டி கொண்டார். 70 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முடி சூட்டு விழாவுக்கான தடல்புடல் ஏற்பாடுகளை பக்கிங்காம் அரண் மனை நிர்வாகம் செய்தது.
இந்த முடி சூட்டு விழாவை காண இங்கிலாந்து மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளும் வியப்புடன் காத்திருந்தனர். இதனால் லண்டன் மாநகர் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. உலக நாடுகளில் இருந்து அந்தந்த நாட்டின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில், இந்தியா சார்பில் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் கலந்து கொண்டுள்ளார்.
பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து, மூன்றாம் சார்லஸ் தங்க சாரட் வண்டியில் வேஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். தேவாலயத்தில் அவர் இங்கிலாந்து மன்னராக முடிசூட்டி கொள்ள உறுதி மொழி எடுத்துக்கொண்டார். இதனால் லண்டன் நகரமே விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது.
இதையும் படிங்க..ரூ.20000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ
இதையும் படிங்க..இனிமே இப்படித்தான்! அதிகாரிகள் மாற்றம்! அமைச்சர்கள் மாற்றம்? அதிரடியில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின் - ஏன்?