Asianet News TamilAsianet News Tamil

அமீரகத்தில் உறக்கமின்றி தவித்த மோடி...! உங்களைப்போல் இனி ஒருவரை பார்க்கமுடியாது ஜெட்லி...! என நெகிழ்ச்சி

அருண் ஜெட்லியின் உடலுக்கு பிரதமர் மோடி சார்பில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்துவார் என கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில் சிறுவயது முதல் நாட்டிற்க்காகவும் கட்சிக்காகவும் தன்னை அற்பணித்துகொண்ட அற்புத மனிதர் ஜெட்லி என்றும், அவரைப்போல் ஒருநல்மனிதரை நான் இனி சந்திக்கப்போவதில்லை என்று அமீரகத்தில் ஜெட்லியை புகழ்ந்து உரையாற்றிய மோடி, அவரின் முகத்தை இறுதியாக பார்க்க முடியவில்லையே என்ற வேதனையில் அமீரகத்தில் தூக்கமின்ற தவித்த தாக தகவல்கள் வெளியாகி உள்ளஃது.

prime minister modi  sleep less night
Author
UAE, First Published Aug 25, 2019, 9:41 AM IST

பிரதமர் மோடி  வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருப்பதால் , மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இறுதியாக ஜெட்லியின் முகத்தை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் பிரதமர் மோடி அமீரகத்தில் உற்க்கமின்றி தவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.prime minister modi  sleep less night

பிரதர்மர் மோடி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ், அமீரகம், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார், நேற்று பக்ரைன் சென்ற அவர் இன்று மீண்டும் பிரான்ஸ் செலுக்கிறார். நாளை பிரான்சில் நடைபெறும் ஜி7 மநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுவதுடன்  பின்னர் டெல்லி திரும்பு ஏற்கனவே திட்டமிடப்பட்டது. இந்நிலையில் மத்திய முன்னாள் நிதி அமைச்சரும் , பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்தது. அவரின் மரணத்தால்  நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஜெட்லியின் மரணச்செய்தியை கேள்விப்பட்ட மோடி அவர்கள் உடனே அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு நாடு திரும்ப முடிவு செய்தார்.prime minister modi  sleep less night

 ஆனால் ஜெட்லியின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர். நாட்டுக்கான வெளிநாடு சென்றுள்ள பயணத்தை ரத்து செய்ய வேண்டாம் என பிரதமர் மோடிக்கு அன்பு கட்டளை விடுத்தனர். பிறகு அவரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மோடி தனது ஆழ்ந்த இரங்களை தொலைபேசியின் வாயிலாகவே ஜெட்லியின் குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொண்டார். எனவே பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் திட்டமிட்டபடியே தொடரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அருண் ஜெட்லியின் உடலுக்கு பிரதமர் மோடி சார்பில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்துவார் என கூறப்பட்டு உள்ளது.prime minister modi  sleep less night

 இந்நிலையில் சிறுவயது முதல் நாட்டிற்க்காகவும் கட்சிக்காகவும் தன்னை அற்பணித்துகொண்ட அற்புத மனிதர் ஜெட்லி என்றும், அவரைப்போல் ஒருநல்மனிதரை நான் இனி சந்திக்கப்போவதில்லை என்று அமீரகத்தில் ஜெட்லியை புகழ்ந்து உரையாற்றிய மோடி, அவரின் முகத்தை இறுதியாக பார்க்க முடியவில்லையே என்ற வேதனையில் அமீரகத்தில் தூக்கமின்ற தவித்த தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios