திபெத்தை இன்னொரு சீனாவாக மாற்ற அதிபர் ஜி ஜின் பிங் போட்ட கொடூர திட்டம்: அழிவுக்காலம் வந்துடுச்சி..!!
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை புதிய நவீன சோசலிச நாடக கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என சீன அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். விரைவில் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை புதிய நவீன சோசலிச நாடக கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என சீன அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். விரைவில் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
1950 முதல் திபெத் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. சீன ஆக்கிரமிப்பை எதிர்க்கும் பௌத்த மத தலைவர் தலாய் லாமாவின் ஆதரவாளர்கள் திபெத் மக்களுக்கும், கலாச்சாரத்திற்கும் சீனா கெடுதல் விளைவித்து வருகிறது என கூறி வருகின்றனர். திபெத்தின் பாரம்பரிய, கலாச்சாரத்தை அழித்து சீனா தனது நாட்டின் கலாச்சாரத்தை இங்கே திணித்து வருகிறது. சீன மொழியை கற்க வேண்டியது அவசியம் என்றும் திபெத்தை சீனா அடிமைப்படுத்தி வருகிறது. இந்தியாவில் வசிக்கும் பௌத்த மதகுரு தலாய்லாமாவே தங்களின் தலைவர் என்று புத்த மதத்தினர் கூறிவருகின்றனர். ஆனால் தலாய்லமா ஒரு பிரிவினைவாதி என சீனா கூறிவருவதுடன், திபெத் பகுதியில் பல நூறு ஆண்டுகளாக தங்களுக்கு இறையாண்மை உள்ளது எனக்கூறிவருகிறது.
மொத்தத்தில் தீபத் மீது சீனா ஆதிக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தீபத்துக்கு பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யி இந்திய எல்லையோரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ கட்டுமானங்களை பார்வையிட்டுள்ளார். இந்நிலையில் ஏற்கனவே சீனாவுடன் இந்தியாவுக்கு மோதல் இருந்து வரும் நிலையில், சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் நிலைத் தன்மையையும், தேசிய ஒருமைப்பாட்டையும் நிலைநாட்ட சீனா அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். திபெத் பணி குறித்த ஏழாவது மத்திய மாநாட்டில் உரையாற்றிய அதிபர் ஜி ஜின்பிங், செழிப்பான கலாச்சார ரீதியாக முன்னேறிய, இணக்கமான மற்றும் முழுமையான திட்டத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், மேலும் புதிய சகாப்தத்தின் திபெத்தை ஆட்சி செய்வதற்கான, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் மாநாட்டு கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொத்தத்தில் திபெத்தில் புதிய, நவீன, சோசலிசத்தை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒத்திசைவு என்பது சீனர் அல்லாத சமூகங்களை சீனக் கலாச்சாரத்தின் கீழ் கொண்டுவருவது, மேலும் சீனா அரசியலமைப்பை சோஷலிசம் என்ற கருத்துடன் அந்நாடுகளில் பயன்படுத்துதல் எனவும் அவர் பேசியுள்ளார். அதேபோல் திபெத்தில் சீனா செய்துள்ள சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களுக்கு அங்குள்ள அதிகாரிகளை ஜி ஜின் பிங் வெகுவாக பாராட்டியுள்ளார். பீஜிங்கில் அதேபோல் சீனாவின் அரசு செய்தி முகமையான சின்ஹூவா, திபெத்தில் அரசியல் மற்றும் கொள்கை ரீதியான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் அப்போதுதான் அங்குள்ள ஒவ்வொருவர் இதயத்திலும் சீனா மீதான பற்று விதைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல் திபெத்தில் உள்ள இனக் குழுக்களை ஒருங்கிணைத்து அங்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியை வலுவாக்குவது அவசியம் என்றும் அவர் அதிபர் ஜி ஜின் பிங் வலியுறுத்தியுள்ளார்.