2023 ஜி20 உச்சி மாநாடு தலைவர் பொறுப்பை ஏற்றார் பிரதமர் மோடி; குறிக்கோள் நிறைந்ததாக இருக்கும் என்று பேச்சு!!

இந்தியாவின் ஜி20 தலைவர் பதவி அனைவரையும் உள்ளடக்கியதாகவும், குறிக்கோள் நிறைந்ததாக, தீர்க்கமானதாக,  செயல் சார்ந்ததாகவும் இருக்கும். அடுத்த ஒரு வருடத்தில், ஜி 20 கூட்டு நடவடிக்கைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்படுவது எங்கள் முயற்சியாக இருக்கும் என்று பிரதமர் மோடி இன்று அடுத்த ஆண்டுக்கான ஜி 20 உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்துவதற்கான தலைமையை ஏற்று பேசினார்.

President of Indonesia Joko Widodo hands over the G20 Presidency to PM Modi

பிரதமர் மோடி மேலும் பேசுகையில், ''பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நமது சகாப்தத்தின் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றாகும். வறுமையை எதிர்த்துப் போராடுவதில் தொழில்நுட்பம் ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது. காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை தீர்க்க டிஜிட்டல் தீர்வுகள் வழி காட்டலாம்'' என்றார்.

வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டின் ஜி 20 உச்சி மாநாட்டுக்கான தலைமையை இந்தியா அதிகாரபூர்வமாக ஏற்கிறது.  மாநாட்டில் மோடி பேசுகையில், ''ஜி 20 தலைவர் பதவியை இந்தியா கைப்பற்றுவது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி20 கூட்டங்களுக்கான ஏற்பாடு செய்வோம். நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஜி 20 உச்சி மாநாட்டை உலகளாவிய மாற்றத்திற்கான கருவியாக மாற்றுவோம். இந்த மாநாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்'' என்றார்.

மத்திய அரசின் தகவலின்படி, முக்கிய உச்சி மாநாடு 2023 ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் டெல்லியில் நடைபெறும். ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் சுமார் 10 முதல் 12 உலக அமைப்புகள் அழைக்கப்படுவார்கள். இதில்,  ஐக்கிய நாடுகள் சபை,  சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு, உலக சுகாதார அமைப்பு ஆகியவையும் அடங்கும்.

சிங்கப்பூர், ஸ்பெயின், நெதர்லாந்து, பங்களாதேஷ் மற்றும் எகிப்து உள்ளிட்ட நிரந்தர உறுப்பு நாடுகளின் தலைவர்களும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்கள்.

டி20 உச்சி மாநாடு (சிந்தனையாளர் உச்சி மாநாடு), டபிள்யூ20 (பெண்கள் உச்சி மாநாடு), ஓய்20 (இளைஞர் உச்சி மாநாடு) என்ற பெயர்களில் ஜி20 உச்சி மாநாட்டின் அங்கங்களாக 200 நிகழ்வுகள் நடைபெறும். நாட்டில் குறிப்பாக டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள் நடைபெறும். சுகாதாரம், தொழிலாளர், நிதி, சுற்றுச்சூழல், கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, காலநிலை மாற்றம், தொற்றுநோய் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. 

G 20 Summit 2022: சவாலான நேரங்களில் இந்தோனேசியாவுக்கு இந்தியா பக்கபலமாக நின்றது: பிரதமர் மோடி பெருமிதம்

இன்றைய சகாப்தம் போர் நிறைந்ததாக இருக்கக்கூடாது... ஜி 20 மாநாட்டு அறிக்கையில் வலியுறுத்தல்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios