மொரோக்கோவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 632ஆக உயர்வு. பதைபதைக்க வைக்கும் வீடியோ..

மொரோக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 600-க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர்.

Powerful 6.8 magnitute earthquake strikes Morocco.. 296 people died.. Shocking video.. Rya

வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் நேற்று இரவு 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மரகேஷிலிருந்து தென்மேற்கே 71 கிலோமீட்டர் தொலைவில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் இரவு 11:11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. கடலோர நகரங்களான ரபாட், காசாபிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிரா வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 632 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மொரோக்கோ பகுதியில், முதல்கட்டமாக 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

மொரோக்கோ நிலநடுக்கம் தொடர்பாக சமூக ஊடகங்களில் சில வீடியோக்கள் வேகமாக பரவி வருகின்றன. அதில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்து தெருக்களில் இடிந்து விழுவதை பார்க்க முடிகிறது. ஷாப்பிங் சென்டர், உணவகங்கள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியே ஓடுவதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.  மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற அச்சத்தில் பலர் சாலைகளியே தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இதனிடையே பிரதமர் மோடி இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது X சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மொராக்கோவில் நிலநடுக்கத்தால் பலர் உயிர் இழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.

 

வட ஆப்பிரிக்காவில் நிலநடுக்கும் ஏற்படுவது அரிதான நிகழ்வு தான் என்றாலும், 1960-ம் ஆண்டு அங்கு 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios