அகதிகளாகவும், புலம் பெயர்ந்தும் வருபவர்களை கருணையோடும், இரக்கத்தோடும் வரவேற்குமாறு போப் ஃப்ரான்சிஸ் கேட்டுக்‍கொண்டுள்ளார். அகதிகளை புறக்‍கணித்தால் அது சட்டவிரோத குடியேற்றத்தை ஏற்படுத்தி விடும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

ரோம் நகரில் பொதுமக்‍களை, போப் ஃப்ரான்சிஸ் சந்திக்‍கும் வாராந்திர நிகழ்ச்சி, St. Peters தேவாலய சதுக்‍கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய போப், உலகத்தின் ஒரு சில பகுதிகளில் மக்‍களை அடிமைப்படுத்தும் சுவர்களும், தடைகளும் பெருகி வருவதாக வேதனையுடன் குறிப்பிட்டார். பல்வேறு நாடுகளிலிருந்து அகதிகளாக புலம்பெயர்ந்து வருபவா்களிடம் அன்பையும், இரக்‍கத்தையும் வெளிப்படுத்துமாறு அவர் கேட்டுக்‍கொண்டார். 

கிரீஸில் உள்ள அகதிகள் முகாமுக்‍கு கடந்த ஏப்ரல் மாதம் சென்ற போப் ஃப்ரான்சிஸ், சிரியாவில் இருந்து அகதிகளாக வந்த 3 குடும்பத்தினரை தத்தெடுத்து ரோம் நகரில் குடியமர்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்‍கது.