Asianet News TamilAsianet News Tamil

என் தலையை துண்டிக்க விரும்பிய அர்ஜென்டினா அரசு! - போப் பிரான்சிஸ் பகீர் தகவல்!

பியூனஸ் அயர்ஸ் பேராயராக இருந்தபோது, 1970 ஆம் ஆண்டுகளில் ராணுவ சர்வாதிகாரத்திற்கு ஒத்துழைப்பு அளித்ததாக என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை திணித்து, அர்ஜென்டினா அரசாங்கம் "என் தலையை துண்டிக்க" விரும்பியது என்று போப் பிரான்சிஸ் தெரிவித்து இருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pope Francis said that when he was archbishop of Buenos Aires, the Argentine government wanted to cut my head off
Author
First Published May 10, 2023, 3:56 PM IST

பிரான்சிஸ், கடந்த ஏப்ரல் 29ம் தேதி ஹங்கேரிக்கு சென்ற போது, ஜேசுயிட்ஸுடனான தனிப்பட்ட உரையாடலில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த கருத்துகள் கடந்த செவ்வாய் கிழமை இத்தாலிய ஜேசுட் இதழான சிவில்டா கடோலிகா (Civilta Cattolica) வில் வெளியடப்பட்டது.


பிரான்சிஸ் வருகையின் போது, ஹங்கேரிய நாட்டின் ஜேசுயிட்ஸ் மத உறுப்பினர் ஒருவர், மறைந்த பேராயர் ஃப்ரென்க் ஜாலிக்ஸ் உடனான தொடர்பை குறித்து கேட்டார். பேராயர் ஃப்ரென்க், பியூனஸ் அயர்ஸ் குடிசைப்பகுதியில் சமூகப் பணி செய்தபோது இடது சாரிகளுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டவர்.

ஜாலிக்ஸ் 1976ம் ஆண்டு, மற்றொரு ஜேசுட் பாதிரியாரும் உருகுவே நாட்டைச் சேர்ந்த ஆர்லாண்டோ யோரியாவுடன் கைது செய்யப்பட்டார். ஆர்லாண்டோ கடந்த 2000வது ஆண்டில் இறந்தார். ஜாலிக்ஸ் 2021ல் இறந்தார்.

பிரான்சிஸ் 2013-ல் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​ அர்ஜென்டினா பத்திரிகையாளர் ஒருவர், பிரான்சிஸ் பங்குதந்தை ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ மற்றும் இடதுசாரிகளுக்கு எதிரான இராணுவத்தின் "டர்டி போரின்" போது இரண்டு பாதிரியார்களுக்கு துரோகம் செய்ததாக குற்றம் சாட்டினார்.

சர்வாதிகார சூழலில் நிலைமை மிகவும் குழப்பமாகவும் நிச்சயமற்றதாகவும் இருந்தது. பின்னர் நான் அவர்களை சிறையில் அடைக்க ஒப்படைத்தேன் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

தான் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, ஜாலிக்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், கைது என்பது எதிர்கால போப்பின் தவறு அல்ல என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பிரான்சிஸ் எப்போதும் மறுத்து வருகிறார்.

வருங்கால போப்பான பிரான்சிஸ், 2010ல் பியூனஸ் அயர்ஸின் பேராயரானார். அப்போது, சர்வாதிகாரத்தை விசாரிக்கும் மூன்று நீதிபதிகள் குழு முன் அவர் சாட்சியமளித்தார். அப்போது, 'அரசாங்கத்தில் உள்ள சிலர் 'தன் தலையை வெட்ட' விரும்பினர்.(ஆனால்) இறுதியில் தான் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டது " என்று பிரான்சிஸ் கூறினார்.

அர்ஜென்டினா அரசியல்வாதிகளுடனான போப் பிரான்சிஸின் இந்த அமைதியற்ற உறவால், பிரான்சிஸ் போப் ஆனதிலிருந்து அவர் இன்னும் தனது தாய்நாட்டிற்கு திரும்பாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

70 ஆண்டுகளுக்கு பிறகு.. பிரிட்டன் அரசராக முடிசூட்டிக்கொண்டார் 3ம் சார்லஸ் !!
 

Follow Us:
Download App:
  • android
  • ios