வெள்ளை மாளிகைக்கு வந்த விஷம் தடவப்பட்ட கடிதம்... டிரம்ப் உயிருக்கு குறி..?

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு விஷம் தடவப்பட்ட கடிதன் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

Poisoned letter to the White House ... a sign of Trump's life ..?

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு விஷம் தடவப்பட்ட கடிதன் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்குக் கனடா நாட்டு முகவரியிலிருந்து கடிதம் ஒன்று வந்துள்ளது. இந்த கடிதத்தால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அதனைச் சோதித்து பார்த்தபோது, அதில் உயிரைக் கொல்லக்கூடிய விஷம் தடவப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.Poisoned letter to the White House ... a sign of Trump's life ..?

இதனையடுத்து அந்த கடிதத்தை வெள்ளை மாளிகையில் இருந்து அப்புறப்படுத்திய அதிகாரிகள், ட்ரம்ப்பின் உயிருக்கு குறிவைத்து இந்த கடிதம் அனுப்பப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த கடிதம் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவிற்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டு அவருக்கு 25 ஆண்டுக் காலம் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios