flood in pakistan :பிரதமர் மோடியின் மனிதநேயத்துக்கும், அக்கறைக்கும் நன்றி: பாகிஸ்தான் பிரதமர் நெகிழ்ச்சி

பாகிஸ்தான் வெள்ளத்தில் பலியானவர்கள் மீதும், பாதிக்கப்பட்டவர்கள் மீதும் அக்கறையோடும், மனிதநேயத்தோடும் விசாரித்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று பாகிஸ்தான் பிரதமர் ஷென்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

PM Sharif expresses gratitude to PM Modi for his concern  floods in Pakistan.

பாகிஸ்தான் வெள்ளத்தில் பலியானவர்கள் மீதும், பாதிக்கப்பட்டவர்கள் மீதும் அக்கறையோடும், மனிதநேயத்தோடும் விசாரித்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று பாகிஸ்தான் பிரதமர் ஷென்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் பிற்பகுதியில் தொடங்கிய பருவமழை அந்நாட்டில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மழை மற்றும் வெள்ளத்துக்கு 1200க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 3 கோடிக்கு மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

PM Sharif expresses gratitude to PM Modi for his concern  floods in Pakistan.

 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். 6.50  லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு உடனடியாக மருத்துவக் கவனிப்பும், சத்தான உணவும் தேவைப்படுகிறது.இதில் 75000 கர்ப்பிணிப் பெண்கள் அடுத்த மாதம் பிரசவத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. 

flood in paksitan: பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்: ஆயிரம் பேர் உயிரிழப்பு: சர்வதேச உதவி கோருகிறது

பாகிஸ்தான் ஏற்கெனவே நிதிப்பற்றாக்குறையாலும், அந்நியச் செலாவணி பற்றாக்குறையாலும் பாதிக்கப்பட்டநிலையில் சர்வதேச செலாவணி நிதியம் நிதியுதவி வழங்கியுள்ளது.

PM Sharif expresses gratitude to PM Modi for his concern  floods in Pakistan.

இந்நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்ட பெருவெள்ளம், பாதிப்பு, மக்கள் துயரம் ஆகியவற்றைப் பார்த்து வேதனையடைந்து பிரதமர் மோடி கடந்த இரு நாட்களுக்கு முன் கருத்துத் தெரிவித்துள்ளார்
பிரதமர் மோடி ட்விட்டரி்ல்  பதிவிட்ட கருத்தில் “ பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.

rishi sunak : ‘பிரிட்னுக்காகவும், கட்சிக்காவும் இரவுபகலாக உழைப்பேன்’: ரிஷி சுனக் உறுதி

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், காயத்தால் அவதிப்படுபவர்களுக்கும், இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களின் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கிறோம். பாகிஸ்தானில் விரைவில் இயல்புநிலைவரும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

PM Sharif expresses gratitude to PM Modi for his concern  floods in Pakistan.

பிரதமர் மோடியின் அக்கறைக்கும், மனிதநேயத்துக்கும் பாகிஸ்தான் அரசு நன்றி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷென்பாஸ் ஷெரீப் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பாகிஸ்தான் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். 

அல்லாஹ்வின் ஆசியால், பாகிஸ்தான் மக்களின் குணமான எதையும் தாங்கும், எதிர்த்து நிற்கும் சக்தியால், இயற்கை பேரிடரின் மோசமான பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவார்கள். தங்களின் வாழ்வாதாரத்தையும், சமூகத்தையும் மீண்டும் மறுகட்டமைப்பு செய்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

india gdp: இந்தியாவின் பொருளாதாரம் 13.5% வளர்ச்சி: ஏப்ரல்-ஜூன் முதல் காலாண்டு முடிவு அறிவிப்பு

பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பும் ட்விட்டர் மூலம் உரையாடியதையடுத்து, இந்தியாவிலிருந்து அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், பழங்களை இறக்குமதி செய்வது குறித்து பாகிஸ்தான் ஆலோசித்து வருகிறது. 

பாகிஸ்தானில் பெய்த மழையால் விவசாயிகள் நிலங்கள் நீரில் மூழுகியுள்ளதால் உணவுப் பொருட்கள் இறக்குமதி குறித்து பாகிஸ்தான் அரசு ஆலோசித்து வருகிறது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios